Tamil Daily Rasi Palan Today 15th February 2020

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  15.02.2020

இன்றைய  பஞ்சாங்கம்

15-02-2020, மாசி 03, சனிக்கிழமை, சப்தமி மாலை 04.29 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 05.09 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சுக்கி

 

 

ராகு

புதன் சூரிய

திருக்கணித கிரக நிலை

15.02.2020

 

சனி

 

கேது குரு செவ்

 

சந்தி

 

இன்றைய ராசிப்பலன் – 15.02.2020

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு உயரும்.


virgo-single-iconகன்னி

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். புதிய முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.


libra-single-iconதுலாம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணவரவுகளில் சிறு இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். செய்யும் செயல்களில் நிதானமாக செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளையும், வெளியூர் பயணங்களையும் தள்ளி வைப்பது நல்லது.