Tamil Daily Rasi Palan Today 15th October 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  15.10.2019

இன்றைய  பஞ்சாங்கம்

 

15-10-2019, புரட்டாசி 28, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 05.45 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.30 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

சந்தி

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

15.10.2019

 

 

 

சனி கேது

குரு

 புதன் சுக்கி

சூரிய செவ்

இன்றைய ராசிப்பலன் – 15.10.2019

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சேமிப்பு உயரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். வேலை பளு குறையும். கடன் பிரச்சினைகள் விலகும்.


capricorn-single-iconமகரம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.