Tamil Daily Rasi Palan Today 16th December 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  16.12.2019

இன்றைய  பஞ்சாங்கம்

16-12-2019, கார்த்திகை 30, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 03.40 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 02.47 வரை பின்பு மகம். சித்தயோகம் பின்இரவு 02.47 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. நவகிரக வழிபாடு நல்லது.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

 

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

16.12.2019

சந்தி

  சுக்கி

 

சனி கேது குரு 

சூரிய புதன்

செவ்

 


இன்றைய ராசிப்பலன் – 16.12.2019

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனமாக செயல்படுவது நல்லது.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக அனுகூலப் பலன் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பலன்கள் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பர்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் பெண்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவு ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.


capricorn-single-iconமகரம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.