Tamil Daily Rasi Palan Today 17th December 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  17.12.2019

இன்றைய  பஞ்சாங்கம்

17-12-2019, மார்கழி 01, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 01.37 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பின்இரவு 01.26 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. தனுர் மாத பூஜை ஆரம்பம்

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

 

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

17.12.2019

 

  சுக்கி

சந்தி

சனி கேது குரு சூரிய

புதன்

செவ்

 


இன்றைய ராசிப்பலன் – 17.12.2019

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும்.  அலுவலகத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.