Tamil Daily Rasi Palan Today 17th October 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  17.10.2019

இன்றைய  பஞ்சாங்கம்

17-10-2019, புரட்டாசி 30, வியாழக்கிழமை, திரிதியை திதி காலை 06.48 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. கிருத்திகை நட்சத்திரம் பிற்பகல் 03.51 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

 

சந்தி

ராகு

 

திருக்கணித கிரக நிலை

17.10.2019

 

 

 

சனி கேது

குரு

 புதன் சுக்கி

சூரிய செவ்


இன்றைய ராசிப்பலன் – 17.10.2019

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். கொடுத்த கடன்களும் வசூலாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வேலையில் இருந்த பணிச்சுமைகள் சற்று குறையும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக வீண் பிரச்சினைகள் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும்.