Tamil Daily Rasi Palan Today 19th January 2020

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  19.01.2020

இன்றைய  பஞ்சாங்கம்

19-01-2020, தை 05, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 02.51 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. விசாகம் நட்சத்திரம் இரவு 11.41 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

 

 

ராகு

சுக்கி

திருக்கணித கிரக நிலை

19.01.2020

 

  புதன் சூரிய

 

சனி குரு கேது

செவ்

  சந்தி

 


இன்றைய ராசிப்பலன் – 19.01.2020

aries-single-iconமேஷம்

இன்று இல்லத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் உண்டாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.


cancer-single-iconகடகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


leo-single-iconசிம்மம்

இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் உண்டாகும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலம் கிட்டும்.


sagittarius-single-iconதனுசு

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எதிலும் உற்சாகமின்றி செயல்படுவீர்கள். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


pisces-single-iconமீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.