Tamil Daily Rasi Palan Today 1st August 2020

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  01.08.2020

இன்றைய  பஞ்சாங்கம்

 

01-08-2020, ஆடி 17, சனிக்கிழமை, திரியோதசி திதி இரவு 09.55 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மூலம் நட்சத்திரம் காலை 06.48 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சனி பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

செவ்

 

 

புதன் சுக்கி ராகு

 

திருக்கணித கிரக நிலை

01.08.2020

சூரிய

சனி (வ) 

 

குரு (வ)

சந்தி கேது

 

 

 

இன்றைய ராசிப்பலன் – 01.08.2020

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று கால தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலப் பலனை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியுடன் பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க முடியும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும். திருமண பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வங்கி கடன் பெறுவதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.