Tamil Daily Rasi Palan Today 1st November 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  01.11.2019

இன்றைய  பஞ்சாங்கம்

01-11-2019, ஐப்பசி 15, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 12.51 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மூலம் நட்சத்திரம் இரவு 09.52 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 09.52 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

 

 

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

01.11.2019

 

 

 

சனி கேது

சந்தி

குரு சுக்கி

புதன் (வ)

 

 சூரிய

செவ்

 


இன்றைய ராசிப்பலன் – 01.11.2019

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தூரப் பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.


cancer-single-iconகடகம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.


virgo-single-iconகன்னி

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.


libra-single-iconதுலாம்

இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று எளிதில் முடியும் காரியம் கூட காலதாமதமாக முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.