Tamil Daily Rasi Palan Today 20th November 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  20.11.2019

இன்றைய  பஞ்சாங்கம்

20-11-2019, கார்த்திகை 04, புதன்கிழமை, அஷ்டமி திதி பிற்பகல் 01.41 வரை பின்பு தேய்பிறை நவமி. மகம் நட்சத்திரம் இரவு 08.04 வரை பின்பு பூரம். சித்தயோகம் இரவு 08.04 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

 

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

20.11.2019

 

 

சந்தி

கேது சனி குரு

சூரிய சுக்கி

  செவ்

புதன் (வ)

 


இன்றைய ராசிப்பலன் – 20.11.2019

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் தேவையற்ற அலைச்சல்களும் வீண் விரயங்களும் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும்.


taurus-single-iconரிஷபம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


gemini-single-iconமிதுனம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.


cancer-single-iconகடகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மறைமுக பகை குறையும். வருமானம் பெருகும்.


virgo-single-iconகன்னி

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.


libra-single-iconதுலாம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைக்கும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். எடுக்கும் காரியங்களை முடிப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். உத்தயோக ரீதியான வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.


capricorn-single-iconமகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.