Tamil Daily Rasi Palan Today 23rd December 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  23.12.2019

இன்றைய  பஞ்சாங்கம்

23-12-2019, மார்கழி 07, திங்கட்கிழமை, துவாதசி திதி பகல் 01.42 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. விசாகம் நட்சத்திரம் மாலை 05.39 வரை பின்பு அனுஷம். மரணயோகம் மாலை 05.39 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

 

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

23.12.2019

 

  சுக்கி

 

சனி கேது குரு சூரிய

புதன்

செவ்

சந்தி

 


இன்றைய ராசிப்பலன் – 23.12.2019

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.52 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.


taurus-single-iconரிஷபம்

இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடையலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.


cancer-single-iconகடகம்

இன்று பிள்ளைகளால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் பிரச்சினைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் மந்த நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு கூடும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.


libra-single-iconதுலாம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகலாம். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக எதிர்ப்புகள் விலகும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.52 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். பயணங்களில் கவனம் தேவை. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் செய்வது நல்லது.