Tamil Daily Rasi Palan Today 23rd January 2021

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  23.01.2021

இன்றைய  பஞ்சாங்கம் 

23-01-2021, தை 10, சனிக்கிழமை, தசமி திதி இரவு 08.56 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 09.32 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் இரவு 09.32 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. தை கிருத்திகை. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

செவ்

சந்தி ராகு

 

 

திருக்கணித கிரக நிலை

23.01.2021

 

சூரிய புதன் குரு சனி

 

சுக்கி

கேது

 

 


இன்றைய ராசிப்பலன் – 23.01.2021

aries-single-iconமேஷம்

இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும்.

 

taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.


gemini-single-iconமிதுனம்

இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். பணபற்றாக்குறை நீங்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.


libra-single-iconதுலாம்

இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினை குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.


sagittarius-single-iconதனுசு

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்ககூடும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும்.