Tamil Daily Rasi Palan Today 25th May 2020

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  25.05.2020

இன்றைய  பஞ்சாங்கம்

25-05-2020, வைகாசி 12, திங்கட்கிழமை, திரிதியை திதி பின்இரவு 01.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 06.09 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

 

சூரிய சுக்கி (வ)

ராகு புதன் சந்தி

செவ்

திருக்கணித கிரக நிலை

25.05.2020

 

குரு (வ) சனி (வ)

 

கேது

 

 

 

இன்றைய ராசிப்பலன் – 25.05.2020

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். சுபகாரியங்களில் அனுகூலம் கிட்டும்.

taurus-single-iconரிஷபம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு மனசங்கடங்கள் தோன்றும். முயற்சி செய்தால் எடுக்கும் காரியத்தில் முன்னேற்றம் அடையலாம். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பொருளாதார ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும்.


cancer-single-iconகடகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


leo-single-iconசிம்மம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். பொது காரியங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நற்பலன்கள் கிட்டும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.


virgo-single-iconகன்னி

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பணி சுமையை குறைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பிறரை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம்.


sagittarius-single-iconதனுசு

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடன் பிரச்சினை ஓரளவு தீரும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் புதிய முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடைய முடியும்.