Tamil Daily Rasi Palan Today 25th September 2020

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  25.09.2020

இன்றைய  பஞ்சாங்கம் 

25-09-2020, புரட்டாசி 09, வெள்ளிக்கிழமை, நவமி திதி மாலை 06.44 வரை பின்பு வளர்பிறை தசமி. பூராடம் நட்சத்திரம் மாலை 06.31 வரை பின்பு உத்திராடம். பிரபலாரிஷ்ட யோகம் மாலை 06.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

 

செவ்(வ)

ராகு

 

 

திருக்கணித கிரக நிலை

25.09.2020

சுக்கி

 சனி(வ)

 

குரு 

சந்தி

    கேது 

புதன்

சூரிய


இன்றைய ராசிப்பலன் – 25.09.2020

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.

taurus-single-iconரிஷபம்

இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் வாய்ப்பு அமையும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு வருமானம் பெருகும். பணபற்றாக்குறை நீங்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த பிரச்சினைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


leo-single-iconசிம்மம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்ககூடும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் கடினமாக முயற்சித்தால் மட்டுமே எடுத்த காரியத்தை முடிக்க முடியும். வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் கிடைக்கும் உதவியால் மனநிம்மதி உண்டாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.


pisces-single-iconமீனம்

இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும்.