Tamil Daily Rasi Palan Today 27th October 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  27.10.2019

இன்றைய  பஞ்சாங்கம்

 

27-10-2019, ஐப்பசி 10, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.23 வரை பின்பு அமாவாசை. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 03.16 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. தீபாவளி பண்டிகை. கேதார கௌரி விரதம். லட்சுமி குபேர பூஜை

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

 

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

27.10.2019

 

 

 

சனி கேது

குரு

புதன்

 சூரிய சுக்கி

செவ்

சந்தி

இன்றைய ராசிப்பலன் – 27.10.2019

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.


gemini-single-iconமிதுனம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.


cancer-single-iconகடகம்

இன்று எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.31 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.31 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சல் உண்டாகும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.