Tamil Daily Rasi Palan Today 27th September 2020

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  27.09.2020

இன்றைய  பஞ்சாங்கம் 

27-09-2020, புரட்டாசி 11, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.47 வரை பின்பு வளர்பிறை துவாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 08.49 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் இரவு 08.49 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

செவ்(வ)

ராகு

 

 

திருக்கணித கிரக நிலை

27.09.2020

சுக்கி

 சனி(வ)

சந்தி

 

குரு 

 

    கேது 

புதன்

சூரிய

 


இன்றைய ராசிப்பலன் – 27.09.2020

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

taurus-single-iconரிஷபம்

இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.


cancer-single-iconகடகம்

இன்று  நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.


virgo-single-iconகன்னி

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலங்கள் உண்டாகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகளை சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். வியாபார ரீதியான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.