Tamil Daily Rasi Palan Today 29th May 2020

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  29.05.2020

இன்றைய  பஞ்சாங்கம்

29-05-2020, வைகாசி 16, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி இரவு 09.55 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.58 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. கரிநாள். சுபமுயற்சிகளை  தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

 

சூரிய சுக்கி (வ)

ராகு புதன்

செவ்

திருக்கணித கிரக நிலை

29.05.2020

சந்தி

குரு (வ) சனி (வ)

 

கேது

 

 

 

இன்றைய ராசிப்பலன் – 29.05.2020

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை சற்று அனுசரித்து சென்றால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் கடன் சுமை ஓரளவு குறையும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.


cancer-single-iconகடகம்

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளிவட்டார நட்பு ஏற்படும். திருமண முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். நினைத்தது நிறைவேறும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் உதவியும் மகிழ்ச்சியை அளிக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். செலவுகள் குறைந்து காணப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் நற்பலன் அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.


sagittarius-single-iconதனுசு

இன்று வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடித்தால் சாதகமான பலன் உண்டாகும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வெளி பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய கருவிகள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.