Tamil Daily Rasi Palan Today 2nd November 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  02.11.2019

இன்றைய  பஞ்சாங்கம்

02-11-2019, ஐப்பசி 16, சனிக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 01.31 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் இரவு 11.01 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி. சூரசம்ஹாரம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

 

 

ராகு

 

திருக்கணித கிரக நிலை

02.11.2019

 

 

 

சனி கேது

சந்தி

குரு சுக்கி

புதன் (வ)

 

 சூரிய

செவ்

 


இன்றைய ராசிப்பலன் – 02.11.2019

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு மனஅமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். சகோதர சகோதரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.


virgo-single-iconகன்னி

இன்று பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.


libra-single-iconதுலாம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவுகேற்ற செலவுகள் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். எதிர்பாராத உதவி கிட்டும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். சுபகாரியங்கள் கைகூடும். சேமிப்பு உயரும்.