Tamil Daily Rasi Palan Today 7th July 2020

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  07.07.2020

இன்றைய  பஞ்சாங்கம்

07-07-2020, ஆனி 23, செவ்வாய்க்கிழமை, துதியை திதி காலை 09.03 வரை பின்பு தேய்பிறை திரிதியை. திருவோணம் நட்சத்திரம் இரவு 11.56 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் -முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

செவ்

 

சுக்கி

சூரிய ராகு புதன் (வ)

 

திருக்கணித கிரக நிலை

07.07.2020

 

சந்தி

சனி (வ)

 

குரு(வ) கேது

 

 

 

இன்றைய ராசிப்பலன் – 07.07.2020

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.

taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களின் அலட்சியத்தால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.


gemini-single-iconமிதுனம்

இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.


cancer-single-iconகடகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தடைப்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.


libra-single-iconதுலாம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன நிம்மதி குறையும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லை சற்று குறையும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று பிள்ளைகளால் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எளிதில் முடியக்கூடிய காரியத்தை கூட தாமதமாக முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் உண்டாகும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நெருங்கியவர்களால் அனுகூலம் உண்டாகும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.