Tamil Daily Rasi Palan Today 7th November 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  07.11.2019

இன்றைய  பஞ்சாங்கம்

07-11-2019, ஐப்பசி 21, வியாழக்கிழமை, தசமி திதி காலை 09.55 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம் காலை 09.15 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் காலை 09.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

 

 

ராகு

சந்தி

திருக்கணித கிரக நிலை

07.11.2019

 

 

 

சனி குரு கேது

சுக்கி

புதன் (வ)

சூரிய

செவ்


இன்றைய ராசிப்பலன் – 07.11.2019

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று வீட்டில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும்.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அரசு வழி உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிறு இடையூறுக்குப் பின் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் நிதானத்துடன் கவனமாக செயல்படுவது உத்தமம்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் பெருகும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்வதில் சில இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். சேமிப்பு உயரும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடியை தவிர்க்கலாம்.