Tamil Rasi Palan Today 19th November 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  19.11.2017

இன்றைய  பஞ்சாங்கம்

19-11-2017, கார்த்திகை 03, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி இரவு 07.15 வரை பின்பு வளர்பிறை துதியை. அனுஷம் நட்சத்திரம் இரவு 09.57 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 0.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

திருக்கணித கிரக நிலை 19.11.2017 ராகு
கேது
சனி சூரிய சந்தி புதன் சுக்கி குரு செவ்  
 

இன்றைய ராசிப்பலன் – 19.11.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தவிர்க்கவும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.


leo-single-iconசிம்மம்

இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


virgo-single-iconகன்னி

இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நல்ல பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் தீரும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.  அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகளால் பண தேவைகள் பூர்த்தியாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.


aquarius-single-iconகும்பம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரியங்கள் கைகூடும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். பெரியவர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.