Tamil Rasi Palan Today 24th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  24.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 24-06-2017, ஆனி- 10,சனிக்கிழமை, அமாவாசை திதி காலை 08.00 வரை பின்பு வளர்பிறை பிரதமை திதி பின்இரவு 04.21 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 01.57 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 0.சனிப்ரீதி நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்-காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.  
சுக்கி சூரிய புதன் சந்தி செவ்
கேது திருக்கணித கிரக நிலை24.06.2017  
ராகு
சனி(வ) குரு
 

இன்றைய ராசிப்பலன் – 24.06.2017

aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். தாராள தன வரவால் கடன்கள் குறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது,
gemini-single-iconமிதுனம் இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சனைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
cancer-single-iconகடகம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.
leo-single-iconசிம்மம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.
virgo-single-iconகன்னி இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.
libra-single-iconதுலாம் இன்று பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். உடல் நிலையில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உடல் உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வெளியே பயணம் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. பேச்சை குறைப்பது நல்லது.
sagittarius-single-iconதனுசு இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
capricorn-single-iconமகரம் இன்று நீங்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.
aquarius-single-iconகும்பம் இன்று உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை சமாளிக்கலம். வியாபாரம் ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
pisces-single-iconமீனம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.