Tamil Rasi Palan Today 25th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  25.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 25-06-2017, ஆனி- 11, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி பின்இரவு 01.01 வரை பின்பு வளர்பிறை திரிதியை. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 11.25 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 0.சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
சுக்கி சூரிய புதன் சந்தி செவ்
கேது திருக்கணித கிரக நிலை 25.06.2017  
ராகு
சனி(வ) குரு

இன்றைய ராசிப்பலன் – 25.06.2017

aries-single-iconமேஷம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுக்கிடையே இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
gemini-single-iconமிதுனம் இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
cancer-single-iconகடகம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகளை சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
leo-single-iconசிம்மம் இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
virgo-single-iconகன்னி இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருள் சேரும்-.
libra-single-iconதுலாம் இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும்.  குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
capricorn-single-iconமகரம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல்& வாங்கல் லாபகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
aquarius-single-iconகும்பம் இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
pisces-single-iconமீனம் இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். உடல்நிலை சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.