Tamil Rasi Palan Today 26th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  26.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 26-06-2017, ஆனி- 12, திங்கட்கிழமை, திரிதியை திதி இரவு 10.12 வரை பின்பு வளர்பிறைசதுர்த்தி. பூசம் நட்சத்திரம் இரவு 09.22 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை 26.06.2017   சந்தி
ராகு
சனி(வ) குரு

இன்றைய ராசிப்பலன் – 26.06.2017

aries-single-iconமேஷம் இன்று எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்& வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.
taurus-single-iconரிஷபம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன் பிரச்சனைகள் குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
cancer-single-iconகடகம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.
leo-single-iconசிம்மம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
virgo-single-iconகன்னி இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
libra-single-iconதுலாம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தினருக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
capricorn-single-iconமகரம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.
aquarius-single-iconகும்பம் இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்ககூடும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.
pisces-single-iconமீனம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வருமானம் பெருகும்.