மகரக் கண்ணன் முதலியோர் இறந்த செய்தியைத் தூதர் கூறக் கேட்ட இராவணன் இந்திரசித்தை அழைத்து வரும்படி கூறுதல்

8573. கரன்மகன் பட்ட வாறும்,
குருதியின் கண்ணன் காலின்
சிரன் நெரிந்து உக்க வாறும்,
சிங்கனது ஈறும், சேனைப்
பரம் இனி உலகுக்கு ஆகாது
என்பதும், பகரக் கேட்டான்;
வரன்முறை துறந்தான், ‘வல்லைத்
தருதிர் என் மகனை ‘என்றார்.
1

இந்திரசித்து இராவணன்பால் விரைந்து வருதல்

8574. ‘கூயினன், நுந்தை ‘என்றார்;
குன்று எனக் குவிந்த தோளான்,
‘போயின நிருதர் யாரும்
பொன்றினர் போலும் ‘என்றான்;
‘ஏயின பின்னை, மீள்வார்
நீ அலாது யாவர்? ‘என்னா,
மேயது சொன்னார்; கேட்டான்;
தாதைபால் விரைவின் வந்தான்.
2

இந்திரசித்து, தந்தையைத் தேற்றி வணங்கிச் சேனைகள் சூழப் போர்க்களம் நோக்கிச் செல்லுதல் (8575-8583)

8575. வணங்கி, “நீ, ஐய! நொய்தின்
மாண்டனர் மக்கள் ‘என்ன
உணங்கலை; இன்று காண்டி;
உலப்பு அறு குரங்கின் ஓங்கல்
பிணங்களின் குப்பை, மற்றை
நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதை காணும்;
அமரரும் காண்பர் ‘‘ என்றான்.
3

8576. வலம் கொடு வணங்கி, வான் செல்
ஆயிரம் மடங்கல் பூண்ட
பொலம் கொடி நெடுந்தேர் ஏறி,
போர்ப்பணை முழங்கப் போனான்;
அலங்கல் வாள் அரக்கர் தானை
அறுபது வெள்ளம், யானைக்
குலங்களும், தேரும், மாவும்,
குழாம்கொளக் குழீஇய அன்றே.
4

8577. கும்பிகை, திமிலை, செண்டை,
குறடு, மாப்பேரி, கொட்டி,
பம்பை, தார் முரசம், சங்கம்,
பாண்டில், போர்ப் பணவம், தூரி,
கம்பலி, உறுமை, தக்கை,
கரடிகை, துடி, வேய், கண்டை,
அம்பலி, கணுவை, ஊமை,
சகடையோடு ஆர்த்த அன்றே.
5

8578. யானைமேல் பறை, கீழ்ப் பக்கத்து
எறிமணி, இரதத்து ஆழி,
மான மாப் புரவிப் பொன் தார்,
மரக் கொடி கண்டை, மானச்
சேனையோர் கழலும் தாரும்
சேண் தரப் புலம்ப, மற்றை
வானகத்து ஓடும் ஆழி அலை
என, வளர்ந்த அன்றே.
6

8579. சங்கு ஒலி, வயிரின் ஓசை,
ஆகுளி, தழங்கு காளம்
பொங்கு ஒலி, வரிகண் பீலிப்
பேர் ஒலி, வேயின் பொம்மல்,
சிங்கத்தின் முழக்கம், வாசிச்
சிரிப்பு, தேர் இடிப்பு, திண் கைம்
மங்குலின் அதிர்வு, வான
மழையொடு மலைந்த அன்றே.
7

8580. பண் தரு கிளவிச் செவ்விப்
பல்லியத்து ஒழுகு தீந்தேன்,
கண்டினில் குயின்ற வீணை
நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினில் பொலியும் நல்யாழ்
வழி உறும் நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும்
அமிழ்து எனலாய அன்றே.
8

8581. வில்லொலி, வயவர் ஆர்க்கும்
விளி ஒலி, தழெிப்பின் ஓங்கும்
ஒல்லொலி, வீரர் பேசும்
ஒலி, உரப்பில் தோன்றும்
செல்லொலி, திரள்தோள் கொட்டும்
சேண் ஒலி, நிலத்தில் செல்லும்
கல்லொலி துரப்ப, மற்றைக்
கடல் ஒலி கரந்தது அன்றே.
9

8582. நாற்கடல் அனைய தானை
நடந்திட, கிடந்த பாரின்
மேல்கடந்து எழுந்த தூளி
விசும்பின்மேல் கொழுந்து வீச,
மால்கடல் சேனை காணும்
வானவர் மகளிர், மானப்
பாற்கடல் அனைய வாட்கண்,
பனி கடல் படைத்த அன்றே.
10

8583. ஆயிர கோடி திண்தேர்,
அமரர்கோன் நகரம் என்ன
மேயின சுற்ற, தானோர்
கொற்றப் பொன் தேரின் மேலான்,
தூய மாச் சுடர்கள் எல்லாம்
சுற்றுற நடுவண் தோன்றும்
நாயகப் பரிதி போன்றான்
தேவரை நடுக்கம் கண்டான்
11

இந்திரசித்து தன் சேனைகளை அன்றிலின் உருவமைய அணி வகுத்து நிறுத்திச் சங்க நாதஞ் செய்து தன் வில்லின் நாணொலி செய்து ஆரவாரித்தல் (8584-8586)

8584. சென்று வெங்களத்தை எய்தி,
சிறையொடு துண்டம், செங் கண்,
ஒன்றிய கழுத்து, மேனி, கால்,
உகிர், வாலொடு, ஒப்ப,
பின்றல் இல் வெள்ளத் தானை
முறைபடப் பரப்பி, பேழ்வாய்
அன்றிலின் உருவது ஆய
அணிவகுத்து, அமைந்து நின்றான்
12

8585. புரந்தரன் செருவில் தந்து
போயது, புணரி ஏழும்
உரம் தவிர்த்து ஊழி பேரும்
காலத்துள் ஒலிக்கும் ஓதை
கரந்தது வயிற்று, கால
வலம்புரி கையின் வாங்கி,
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச
ஊதினான், திசையும் சிந்த.
13

8586. சங்கத்தின் முழக்கம் கேட்ட
கவிப் பெருந்தானை, தள்ளி,
சிங்கத்தின் நாதம் வந்து
செவி புக, விலங்கு சிந்தி
‘எங்கு உற்ற ‘என்னா வண்ணம்
இரிந்தபோல் இரிந்த, ஏழை
பங்கத்தன் மலை வில் அன்ன
சிலை ஒலி பரப்பி ஆர்த்தான்.
14

இந்திரசித்தின் போர்முழக்கம் கேட்ட வானர சேனைகள் வெருவி ஓடுதல் (8587-8588)

8587. கீண்டன, செவிகள்; நெஞ்சம்
கிழிந்தன; கிளர்ந்து செல்லா
மீண்டன, கால்கள்; கையின்
விழுந்தன, மரனும் வெற்பும்;
பூண்டன, நடுக்கம்; வாய்கள்
புலர்ந்தன; மயிரும் பொங்க,
‘மாண்டனம் அன்றோ? ‘என்ற
வானரம் எவையும் மாதோ.
15

8588. செங்கதிர்ச் செல்வன் சேயும்,
சமீரணன் சிறுவன் தானும்,
அங்கதப் பெயரினானும்,
அண்ணலும், இளைய கோவும்,
வெங்கதிர் மௌலிச் செங்கண்
வீடணன் முதல வீரர்
இங்கு இவர் நின்றார் அல்லது,
இரிந்தது, குரங்கின் ஈட்டம்.
16

அரக்கர் சேனை ஆரவாரித்துப் போர்க்களத்தில் மேற்சென்று நெருங்குதல்

8589. படைப் பெருந் தலைவர் நிற்க,
பல் பெருந் தானை வேலை
உடைப்பு உறு புனலின் ஓட,
ஊழிநாள் உவரி ஓதை
கிடைத்திட முழங்கி ஆர்த்துக்
கிளர்ந்தது; நிருதர் சேனை,
அடைத்தது, திசைகள் எல்லாம்;
அன்னவர் அகத்தர் ஆனார்.
17

அனுமன் தோளில் இராமனும் அங்கதன் தோளில் இலக்குவனும் ஏறியமர்ந்து போருக்குப் புறப்படுதல் (8590-8591)

8590. மாருதி அலங்கல் மாலை
மணி அணி வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன்
விறல்கெழு சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும்
ஏறினர்; அமரர் வாழ்த்தி
வேரி அம் பூவின் மாரி
சொரிந்தனர், இடைவி டாமை.
18

8591. விடையின்மேல், கலுழன் தன்மேல்,
வில்லினர் விளங்குகின்ற
கடை இல் மேல் உயர்ந்தார் காட்சி
இருவரும் கடுத்தார் கணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும்
அனுமன் அங்கதன் என்று அன்னார்
தொடையின்மேல் மலர்ந்த தாரார்,
தோளின்மேல் தோன்றும் வீரர்
19

போருக்கு முற்பட்டெழுந்த நீலன் முதலிய படைத் தலைவர்களைப் பின்வரிசையில் நிற்குமாறு இராமன் பணித்தல் (8592-8593)

8592. நீலன் முதலாய் உள்ள
நெடும்படைத் தலைவர் நின்றார்,
தாலமும் மலையும் ஏந்தித்
தாக்குவான் சமையுங் காலை,
ஞாலமும் விசும்பும் காத்த
நானிலக் கிழவன் மைந்தன்,
மேல் அமர் விளைவை உன்னி,
விலக்கினன், விளம்பலுற்றான்.
20

8593. ‘கடவுளர் படைகள், நும்மேல்
வெய்யவன் துரந்த காலை,
தடை உள அல்ல; தாங்கும்
தன்மையிர் அல்லிர்; தாக்கிற்கு
இடை உளது எம்பால் நல்கி,
பின் நிரை நிற்றிர்; ஈண்டு இப்
படை உள தனையும், இன்று எம்
வில்தொழில் பார்த்திர் ‘என்றான்.
21

இராம இலக்குவரின் விற்றொழில் வன்மையும், அது கண்டு இந்திரசித்து வியந்துரைத்தலும் (8594-8598)

8594. அருள்முறை அவரும் நின்றார்;
ஆண்டகை வீரர், ஆழி
உருள்முறை தேரின், மாவின்,
ஓடை மால்வரையின், ஊழி
இருள்முறை நிருதர் தம்மேல்
ஏவினர் இமைப்பிலோரும்
‘மருள் முறை எய்திற்று ‘என்பர்
சிலை வழங்கு அசனி மாரி.
22

8595. இமைப்பதன் முன்னம், வந்த
இராக்கத வெள்ளம் தன்னைக்
குமைத் தொழில் புரிந்த வீரர்
தனுத் தொழில் குறித்து, இன்று எம்மால்
அமைப்பது என்? பிறிது ஒன்று
உண்டோ? மேரு என்று அமைந்த வில்லால்
உமைக்கு ஒரு பாகன் எய்த
புரங்களின் ஒருங்கி வீழ்ந்த.
23

8596. தேரின்மேல் சிலையின் நின்ற
இந்திர சித்து என்று ஓதும்
வீரருள் வீரன் கண்டான்
வீழ்ந்தனர் வீழ்ந்த என்னும்
பாரின்மேல் நோக்கின் அன்றேல்,
பட்டன, பட்டார் என்னும்
போரின்மேல் நோக்கு இலாத,
இருவரும் பொருத பூசல்.
24

8597. ‘யானை பட்டனவோ? ‘என்றான்;
‘இரதம் இற்றனவோ; ‘ என்றான்;
‘மான மா வந்த எல்லாம்
மறிந்து ஒழிந்தனவோ? ‘என்றான்;
‘ஏனை வாள் அரக்கர் யாரும்
இல்லையோ, எடுக்க? ‘என்றான்
வான் உயர் பிணத்தின் குப்பை
மறைத்தலின், மயக்கம் உற்றான்.
25

8598. ‘செய்கின்றார், இருவர் வெம்போர்;
சிதைகின்ற சேனை நோக்கின்,
ஐயம்தான் இல்லா வெள்ளம்
அறுபதும்; ‘அவிக ‘என்று
வைகின்றார் அல்லர்; ஆகின்,
வரிசிலை வலத்தால் மாள
எய்கின்றார் அல்லர்; ஈது
எவ்இந்திர சாலம்? ‘என்றான்.
26

இருவரது போர்த்தொழில் விளைவுகளை இந்திரசித்து வியந்து நோக்குதல் (8599-8605)

8599. அம்பின் மா மழையை நோக்கும்;
உதிரத்தின் ஆற்றை நோக்கும்;
உம்பரின் அளவும் சென்ற
பிணக்குன்றின் உயர்வை நோக்கும்;
கொம்பு அற உதிர்ந்த முத்தின்
குப்பையை நோக்கும்; கொன்ற
தும்பியை நோக்கும்; வீரர்
சுந்தரத் தோளை நோக்கும்.
27

8600. மலைகளை நோக்கும்; மற்று அவ்
வானுறக் குவிந்த வன்கண்
தலைகளை நோக்கும்; வீரர்
சரங்களை நோக்கும்; தாக்கி
உலைகொள் வெம் பொறியின் உக்க
படைக்கலத்து ஒழுக்கை நோக்கும்;
சிலைகளை நோக்கும்; நாண் ஏற்று
இடியினைச் செவியின் நோக்கும்
28

8601. ஆயிரம் தேரை ஆடல்,
ஆனையை, அலங்கல் மாவை,
ஆயிரம் தலையை, ஆழிப்
படைகளை அறுத்தும், அப்பால்
போயின பகழி வேகத்
தன்மையைப் புரிந்து நோக்கும்
பாய்வன பகழிக்கு ஒன்றும்
கணக்கு இலாப் பரப்பைப் பார்க்கும்.
29

8602. அறுபது வெள்ளம் ஆய
அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற,
எறிவன, எய்வ, பெய்வ,
எற்றுறு படைகள் யாவும்,
பொறிவனம் வெந்த போலச்
சாம்பராய்ப் போயது அல்லால்
செறிவன இல்லா ஆற்றைச்
சிந்தையால் தரெிய நோக்கும்.
30

8603. வயிறு அலைத்து ஓடிவந்து
கொழுநர்மேல் மகளிர் மாழ்கி,
குயில்தலத்து உக்க என்னக்
குழைகின்ற குழைவை நோக்கும்;
எயிறு அலைத்து இடிக்கும் பேழ்வாய்த்
தலை இலா யாக்கை ஈட்டம்
பயில்தலை, பறவை பாரில்
படிகிலாப் பரப்பைப் பார்க்கும்.
31

8604. ‘அங்கதர் அநந்த கோடி உளர் ‘
எனும்; ‘அனுமர் என்பார்க்கு
இங்கு இனி உலகம் யாவும்
இடம் இலை போலும் ‘என்றும்;
எங்கும் இம் மனிதர் என்பார்
இருவரேகொல்? ‘என்று உன்னும்;
சிங்க ஏறு அனைய
வீரர் கடுமையைத் தரெிகிலாதான்.
32

8605. ஆர்க்கின்ற அமரர்தம்மை நோக்கும்;
அங்கு அவர்கள் அள்ளித்
தூர்க்கின்ற பூவை நோக்கும்;
துடிக்கின்ற இடத் தோள் நோக்கும்
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும்
பிணப் பரப்பை நோக்கும்
ஈர்க்கின்ற குருதி யாற்றில்
யானையின் பிணத்தை நோக்கும்.
33

அஞ்சி ஓடிய வானரசேனை அரக்கர் பலர் மாளக்கண்டும் மீளாமை

8606. ஆயிர கோடித் தேரும்
அரக்கரும் ஒழிய, அல்லா
மா இருஞ் சேனை எல்லாம்
மாய்ந்தவா கண்டும், வல்லை
போயின குரக்குத் தானை
புகுந்தில அன்றே, பொன் தேர்த்
தீயவன்தன்மேல் உள்ள
பயத்தினால் கலக்கம் தீரா.
34

இராம இலக்குவர் போர்த்தொழில் கண்டு அனுமன் தோள்கொட்டி ஆரவாரிக்க, அரக்கர்கள் அஞ்சி நடுங்குதல் (8607-8608)

8607. தளப் பெருஞ் சேனை வெள்ளம்
அறுபதும் தலத்தது ஆக,
அளப்ப அருந் தேரின்
உள்ளது ஆயிரம் கோடி ஆக,
துளக்கமில் ஆற்றல் வீரர்
தோளும் போர்த்தொழிலும் நோக்கி,
அளப்ப அருந் தோளைக் கொட்டி,
அஞ்சனை சிறுவன் ஆர்த்தான்.
35

8608. ஆர் இடை அநுமன் ஆர்த்த
ஆர்ப்பு ஒலி அசனி கேளா,
தேரிடை நின்று வீழ்ந்தார்
சிலர்; சிலர் படைகள் சிந்தி,
பாரிடை இழிந்து போகப்
பாரித்தார்; பைம்பொன் இஞ்சி
ஊரிடை நின்றுளாரும்,
உயிரினோடு உதிரம் கான்றார்.
36

அஞ்சிய அரக்கர்களைக் கடிந்துரைத்து இந்திரசித்து தான் ஒருவனாகவே இராம இலக்குவர்மேற் போருக்கு எதிர்தல்

8609. ‘அஞ்சினிர், போமின்; இன்று,
ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியற்பாலிர்
வெஞ்சமம் விளைப்பது என்னா?
நீரும் இவ் வீரரோடு
துஞ்சினிர் போலும் அன்றே?
என்று அவர்ச் சுளித்து நோக்கி
மஞ்சினும் கரிய மெய்யான்
இருவர்மேல் ஒருவன் வந்தான்.
37

இந்திரசித்துடன் வந்த தேர்ப்படைகள் கிளர்ந்து எழுதல்

8610. அக்கணத்து ஆர்த்து மண்டி,
ஆயிர கோடித் தேரும்
புக்கன, நேமிப் பாட்டில்
கிழிந்தது புவனம் என்ன
திக்கு இடை நின்ற யானை
சிரம் பொதிர் எறிய, சிந்தி
உக்கன விசும்பின் மீன்கள்
உதிர்ந்திட, தேவர் உட்க.
38

இலக்குவன், இந்திரசித்தின் தலையினை அம்பினால் வீழ்த்துவதாக இராமன் முன்னிலையில் வஞ்சினம் கூறுதல் (8611-8615)

8611. மாற்றம் ஒன்று இளையவன் வளைவில் செங் கரத்து
ஏற்றினை வணங்கி நின்று இயம்புவான் : ‘இகல்
ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர்
தோற்றனன் ‘என்று எனை உலகம் சொல்லுமால்
39

8612. “காக்கவும் கிற்றிலன் காதல் நண்பரை;
போக்கவும் கிற்றிலன் ஒருவன் பொய்ப் பிணி;
ஆக்கவும் கிற்றிலன் வென்றி; ஆருயிர்
நீக்கவும் கிற்றிலன் “ என்று நின்றதால்.
40

8613. ‘இந்திரன் பகை எனும் இவனை என் சரம்
அந்தரத்து அருந் தலை அறுக்கலாது எனின்
வெந்தொழிற் செய்கையன் விருந்தும் ஆய் நெடு
மைந்தரில் கடை எனப் படுவன் வாழியாய்!
41

8614. ‘நின்னுடை முன்னர் இந் நெறி இல் நீர்மையான்
தன்னுடைச் சிரத்தை என் சரத்தின் தள்ளினால்
பொன்னுடை வனைகழல் பொலம் பொன் தோளினாய்!
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் அரோ.
42

8615. ‘நெடியன உலகு எலாம் கண்டு நிற்க என்
அடுசரம் இவன் தலை அறுக்கலாது எனின்
முடிய ஒன்று உணர்த்துவென்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுவதாக ‘என்றான்.
43

அதுகண்டு அமரர் ஆர்த்தலும் இலக்குவனை இராமன் பாராட்டுதலும் (8616-8617)

8616. வல்லவன் அவ்வுரை வழங்கும் ஏல்வையுள்
‘அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர்;
எல்லை இல் உலகங்கள் யாவும் ஆர்த்தன;
நல்லறம் ஆர்த்தது; நமனும் ஆர்த்தனன்.
44

8617. முறுவல் வாள் முகத்தினன் முளரிக் கண்ணனும்
‘அறிவ! நீ “அடுவல் ” என்று அமைதி ஆம் எனின்
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர்; வேறு இனி விளைவது யாது? ‘என்றான்.
45

இராமனைத் தொழுது இலக்குவன் போர்க்குப் புறப்படுதல்

8618. சொல் அது கேட்டு அடி தொழுது ‘சுற்றிய
பல பெருந் தேரொடும் அரக்கர் பண்ணையைக்
கொல்வல்; இங்கு அன்னது காண்டிகொல்! எனா
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான்.
46

அங்கதன் ஆரவாரித்தலும் இராமனது சங்கம் ஒலித்தலும்

8619. அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என;
மங்குல்நின்று அதிர்ந்தன; வயவன் தேர்புனை
சிங்கமும் நடுக்குற திருவின் நாயகன்
சங்கமொன்று ஒலித்தது கடலும் தள்ளுற
47

அரக்கர் இலக்குவன்மேல் படைக்கலங்களை வீசுதல்

8620. எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம்
முழு முரண் தண்டு; வேல் முசுண்டி மூவிலை
கழு அயில் கப்பணம் கவண்கல் கன்னகம்
விழுமலைக்கு இரட்டிவிட்டு அரக்கர் வீசினார்.
48

இலக்குவன் அரக்கர் சேனையை அழித்தல்
(8621-8630)

8621. மீன் எலாம் விண்ணின்நின்று ஒருங்கு வீழ்ந்து என
வானெலாம் மண்ணெலாம் மறைய வந்தன
தானெலாம் துணிந்து போய்த் தகர்ந்து சாய்ந்தன;
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால்
49

8622. ஆயிரம் தேர் ஒரு தொடையின் அச்சு இறும்;
பாய்பரிக் குலம்படும்; பாகர் பொன்றுவர்;
நாயகர் நெடுந்தலை துமியும் நாம் அற
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால்.
50

8623. அடி அறும் தேர்; முரண் ஆழி அச்சு இறும்;
வடி நெடுஞ் சிலை அறும்; கவசம் மார்பு அறும்;
கொடி அறும்; குடை அறும்; கொற்ற வீரர்தம்
முடி அறும்; முரசு அறும்; முகிலும் சிந்துமால்.
51

8624. ‘இன்னது ஓர் உறுப்பு; இவை இனைய தேர் பரி;
மன்னவர் இவர்; இவர் படைஞர் மற்றுளார்
என்ன ஓர் தன்மையும் தரெிந்தது இல்லையால்
சின்னபின்னங்களாய் மயங்கிச் சிந்தலால்.
52

8625. தந்தையர் தேரிடைத் தனயர் வன்தலை
வந்தன; தாதையர் வயிர வான்சிரம்
சிந்தின காதலர்க்கு இயைந்த தேரிடை
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன.
53

8626. செம்பெருங் குருதியின் திகழ்ந்த; செங்கண் மீன்
கொம்போடும் பரவையில் திரியும் கொட்பு என
தும்பை ஆம் தொடையலார் தடக்கை தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன.
54

8627. தடிவன கொடுஞ்சரம் தள்ள தள்ளுற
மடிவன கொடிகளும் குடையும் மற்றவும்
முடிவு அறு பெரும்பிணக் களத்தின் மொய்த்தன
படிவன ஒத்தன பறவை பன்மைய.
55

8628. சிந்துரங்களின் பருமமும்,
பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ்சிலை முதல்
படைகளும், கொடியும்,
இந்தனங்கள் ஆய், இறந்தவர்
விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின,
கழுதுகள் விரும்பி.
56

8629. சில்லி ஊடு அறச் சிதறின
சில; சில, கோத்த
வல்லி ஊடு அற மறிந்தன
புரவிகள் மடியப்
புல்லி மண்ணிடைப் புரண்டன
சில; சில போர் ஆள்
வில்லி சாரதியொடும் பட,
திரிந்தன வெறிய.
57

8630. அலங்கு பல்மணிக் கதிரன குருதியின் அழுந்தி
விலங்கு செஞ்சுடர் விடுவன வெளி இன்றி மிடைந்த
குலம்கொள் வெய்யவர் மறுகிடத் தீயிடைக் குளித்த
இலங்கை மாநகர் மாளிகை நிகர்த்தன இரதம்.
58

இலக்குவனுடன் சேர்ந்து இராமனும் அம்பு சொரிதலால் தன் சேனைகள் மடிய இந்திரசித்து தனித்து நிற்றல்

8631. ஆன காலையில், இராமனும்,
அயில் முகப் பகழி
சோனை மாரியின் சொரிந்தனன்,
அனுமனைத் தூண்டி;
வான மானங்கள் மறிந்து எனத்
தேர் எலாம் மடிய,
தானும் தேருமே ஆயினன்,
இராவணன் தனயன்.
59

இந்திரசித்து, இராம இலக்குவரை நோக்கி, ‘இருவிரும் சேர்ந்து என்னுடன் பொருதிரோ? அன்றி ஒருவர் ஒருவிராய் நின்று பொருதிரோ? என வினவுதல் (8632-8633)

8632. பல் விலங்கொடு புரவிகள்
பூண்ட தேர் பரவை
வல் விலங்கல் போல் அரக்கர்தம்
குழாத்தொடு மடிய,
வில்விலங்கிய வீரரை
நோக்கினன், வெகுண்டான்,
சொல், விலங்கலன், சொல்லினன்
இராவணன் தோன்றல்.
60

8633. ‘இருவிர் என்னொடு பொருதிரோ?
அன்று எனின், ஏற்ற
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ?
உம் படையோடும்
பொருது பொன்றுதல் புரிதிரோ?
உறுவது புகலும்,
தருவல், இன்று உமக்கு ஏற்றுளது
‘ஒன்று‘ எனச் சலித்தான்.
61

யானே உன்னைக் கொல்வதாக வஞ்சினஞ் செய்துள்ளேன் ‘என இலக்குவன் மறுமொழி பகர்தல்

8634. ‘வாளின், திண் சிலைத் தொழிலின்,
மல்லினின், மற்றை
ஆள் உற்று எண்ணிய படைக்கலம்
எவற்றினும் அமரில்
கோள் உற்று உன்னொடு குறித்தது
செய்து, உயிர்கொள்வான்
சூள் உற்றேன்; இது சரதம் ‘என்று,
இலக்குவன் சொன்னான்
62

உன்னையான் கொல்வது உறுதி ‘என இந்திரசித்து இலக்குவனை நோக்கிக் கூறுதல் (8635-8637)

8635. ‘முன் பிறந்த உன் தம்முனை
முறை தவிர்த்து, உனக்குப்
பின்பு இறந்தவன் ஆக்குவென்;
பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென்;
இது முடியேனேல்
என், பிறந்ததனால் பயன்
இராவணற்கு? ‘என்றான்.
63

8636. இலக்குவன் எனும்பெயர் உனக்கு
இயைவதே என்ன
இலக்கு வன்கணைக்கு ஆக்குவென்;
“இதுபுகுந்து இடையே
விலக்குவன் ‘‘ என, விடையவன்
விலக்கினும், வீரம்
விலக்குவன்; இதுகாணும்,
உன் தமையனும் விழியால்.
64

8637. அறுபது ஆக்கிய வெள்ளத்தின்
அரக்கரை அம்பால்,
இறுவது ஆக்கிய இரண்டு
வில்லீரும் கண்டு இரங்க,
மறுவது ஆக்கிய எழுபது
வெள்ளமும் மாள,
வெறுவிது ஆக்குவென், உலகை
இக்கணத்தின் ஓர்வில்லால்.
65

என் தம்பிமாருக்கும் என் சிறிய தந்தைக்கும், நும் இருவரது குருதி நீரால் இறுதிக்கடன் செய்வேன் ‘என இந்திரசித்து கூறுதல்

8638. ‘கும்பகன்னன் என்று ஒருவன்,
நீர் அம்பிடைக் குறைத்த
தம்பி அல்லன் யான்; இராவணன்
மகன்; ஒரு தமியேன்;
எம்பிமாருக்கும் என் சிறு
தாதைக்கும், இருவீர்
செம் புண் நீர் கொடு கடன்
கழிப்பேன்‘ எனத் தீர்ந்தான்.
66

அரக்கராகிய நும்மினத்தார்க்கெல்லாம் ஒருசேர இறுதிக்கடன் செய்தற்கு உள்ளவன் வீடணனே ‘என இலக்குவன் மொழிதல்

8639. ‘அரக்கர் என்பது ஓர் பெயர்
படைத்தீர்க்கு எலாம் அடுத்த
புரக்கும் நன்கடன் செயவுளன்,
வீடணன் போந்தான்;
கரக்கும் நுந்தைக்கு நீ செயக்
கடவன கடன்கள்
இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும் ‘
என்றனன், இளையோன்.
67

இந்திரசித்து வெகுண்டு கடும்போர் புரிதல் (8640-8642)

8640. ஆன காலையில் அயில் எயிறு
அரக்கன் நெஞ்சு அழன்றான்;
வானும் வையமும் திசைகளும்
யாவையும் மறைய,
பால் நல் வேலையைப் பருகுவ
சுடர் முகப் பகழி,
சோனை மாரியின் இருமடி
மும்மடி சொரிந்தான்.
68

8641. அங்கதன்தன் மேல் ஆயிரம்;
அவற்றினுக்கு இரட்டி,
வெங்கண் மாருதி மேனிமேல்;
வேறு உள வீரச்
சிங்கம் அன்னவர் ஆக்கைமேல்
உலப்பு இல செலுத்தி,
எங்கும் வெங்கணை ஆக்கினன்
இராவணன் சிறுவன்.
69

8642. இளைய மைந்தன்மேல், இராமன்மேல்,
இராவணி இகலி,
விளையும் வன்தொழில் வானர
வீரர்மேல், மெய்யுற்று
உளைய வெஞ் சரம் சொரிந்தனன்;
நாழிகை ஒன்று,
வளையும் மண்டலப் பிறை என
நின்றது, வரிவில்
70

அது கண்டு அமரர்கள் அஞ்சுதல்

8643. பச்சி மத்தினும், முகத்தினும்,
மருங்கினும், பகழி,
உச்சி முற்றிய வெய்யவன்
கதிர் என உமிழ,
கச்சம் உற்றவன் கைக்கணைக்
கடுந்தொழில் காண
அச்சம் உற்றனர், கண் புதைத்து
ஒடுங்கினர், அமரர்.
71

இந்திரசித்து ஏவிய அம்புகளைத் தடுத்து விலக்கி இலக்குவன் இந்திரசித்தின்மேல் விரைந்து செல்லுதல்

8644. மெய்யில் பட்டன பட, படாதன
எலாம் விலக்கி,
தயெ்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு
அத்துணை செலுத்தி,
ஐயற்கு ஆங்கு இளங் கோளரி, அறிவு
இலான் அறைந்த
பொய்யின் போம்படி போக்கினன்,
கடிதினில் புக்கான்.
72

இராமன் இந்திரசித்தின்மேல் அம்பு செலுத்தாது வறிதே நிற்க, இலக்குவன் இந்திரசித்து இருவரும் கடும்போர் புரிதல் (8645-8647)

8645. பிறகு நின்றனன் பெருந்தகை,
இளவலைப் பிரியான்,
‘அறம் இது அன்று‘ என அரக்கன்மேல்
சரம் துரந்து அருளான்;
இறவு கண்டிலர் இருவரும்,
ஒருவரை ஒருவர்;
விறகின் வெந்தன, விசும்பிடைச்
செறிந்தன விசிகம்.
73

8646. மாடு எரிந்து எழுந்து
இருவர்தம் கணைகளும் வழங்க,
காடு எரிந்தன; கனம் வரை
எரிந்தன; கனக
வீடு எரிந்தன; வேலைகள்
எரிந்தன; மேகம்
ஊடு எரிந்தன; ஊழியின்
எரிந்தன, உலகம்.
74

8647. படம்கொள் பாம்பு அணை துறந்தவற்கு
இளையவன், பகழி,
விடம்கொள் வெள்ளத்தின் மேலன
வருவன விலக்கி
இடங்கர் ஏறு என, எறுழ்வலி
அரக்கன் தேர் ஈர்க்கும்
மடங்கல் ஐ இரு நூற்றையும்
கூற்றின்வாய் மடுத்தான்
75

இந்திரசித்து, தானேறிய தேர் அழிந்த நிலையில் தனியனாய் நின்று அங்கதன் முதலியோர்மேல் அம்பு எய்து தன் வெற்றிச் சங்கினை ஊதுதல் (8648-8649)

8648. தேர் அழிந்திட, சேமத் தேர் பிறிது
இலன், செறிந்த
ஊர் அழிந்திடத் தனி நின்ற
கதிரவன் ஒத்தான்;
‘பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் ‘
என, பகைத்த
சூர் அழிந்திடத் துரந்து அ(ன்)ன
சுடுசரம் சொரிந்தான
76

8649. அற்ற தேர் மிசை நின்று, போர்
அங்கதன் அலங்கல்
கொற்றத் தோளினும், இலக்குவன்
புயத்தினும், குளித்து
முற்ற, எண்ணிலா முரண் கணை
தூர்த்தனன்; முரண் போர்
ஒற்றைச் சங்கு எடுத்து ஊதினன்,
உலகு எலாம் உலைய.
77

இலக்குவன், இந்திரசித்தின் கங்கணமும் கவசமும் மூட்டறக் கழல அவன்மேற் பத்து அம்புகளைச் சிதறி வில்நாண் ஒலி செய்தல்

8650. சங்கம் ஊதிய தசமுகன்
தனிமகன் தரித்த
கங்கணத்தொடு கவசமும்
மூட்டு அறக் கழல,
வெங் கடுங் கணை ஐ இரண்டு
உரும் என வீசி,
சிங்க ஏறு அன்ன இலக்குவன்
சிலையை நாண் எறிந்தான்.
78

இலக்குவனது வெற்றிகண்டு, ஆரவாரம் செய்யும்படி இராமன் பணிக்க, வானரர் ஆரவாரித்தல்

8651. கண்ட கார்முகில் வண்ணனும்,
கமலக்கண் கலுழ,
துண்ட வெண்பிறை நிலவு என
முறுவலும் தோன்ற,
அண்டம் உண்ட தன்வாயினால்,
ஆர்மின் என்று அருள,
‘விண்டது அண்டம் ‘என்று
உலைந்து இட, ஆர்த்தனர், வீரர்.
79

இந்திரசித்து வானில் மறைந்த நிலையில், இலக்குவன் ‘அவன் மேல் அயன்படை தொடுப்பேன் ‘என இராமனிடம் கூற, இராமன் அது கூடாதனெத் தடுத்தல்

8652. கண் இமைப்பதன் முன்புபோய்
விசும்பிடைக் கரந்தான்;
அண்ணல்; மற்று அவன் ஆக்கை
கண்டு அறிகிலன்; ஆழிப்
பண்ணவற்கு, ‘இவன் பிழைக்குமேல்,
படுக்கும் நம்படையை;
எண்ணம் மற்று இலை; அயன் படை
தொடுப்பல் ‘என்று இசைத்தான்.
80

இராமனது ஆணைக்கு இசைந்து இலக்குவன் அச் செயலைத் தவிர்தல்

8653. ஆன்றவன் அது பகர்தலும்,
‘அறநிலை வழாதாய்!
ஈன்ற அந்தணன் படைக்கலம்
தொடுக்கில், இவ் உலகம்
மூன்றையும் சுடும்; ஒருவனால்
முடிகலது ‘என்றான்,
சான்றவன்; அது தவிர்ந்தனன்,
உணர்வுடைத் தம்பி.
81

மறைந்த இந்திரசித்து, அவரது கருத்தறிந்து, அவர்கள்மேல் தானே தயெ்வப்படையினை ஏவுவதாகத் துணிந்து அவ்விடத்தை விட்டு நீங்க, அதனையுணராத தேவர்களும் வானரர்களும் ஆரவாரித்தல் (8654-8655)

8654. மறைந்துபோய் நின்ற வஞ்சனும்,
அவருடை மனத்தை
அறிந்து, தயெ்வ வான் படைக்கலம்
தொடுப்பதற்கு அமைந்தான்;
‘பிரிந்து போவதே கருமம்
இப்பொழுது ‘எனப் பெயர்ந்தான்;
செறிந்த தேவர்கள் ஆவலம்
கொட்டினர், சிரித்தார்.
82

8655. செஞ் சரத்தொடு செம்மழை
விசும்பிடைச் செல்ல.
மஞ்சின் மாமழை போயினதாம்
என மறைய,
அஞ்சினான் அகன்றான் ‘என,
அறிந்தனர் ஆர்த்தார்
வெஞ்சினம் தருகளிப்பினர்,
வானர வீரர்.
83

தோல்வியுற்ற இந்திரசித்து யாவரும் உணராதபடி மறைந்து இலங்கையை அடைதல்

8656. உடைந்த வானரச் சேனையும்,
ஓத நீர் உவரி
அடைந்தது ஆம் என வந்து, இரைத்து,
ஆர்த்து, எழுந்து ஆடி
தொடர்ந்து சென்றது, தோற்றவன்,
யாவர்க்கும் தோற்றான்
கடந்த வேலைபோல், கலங்குறும்
இலங்கையைக் கலந்தான்
84

அயன்படையைத் தானே முற்படத் தொடுத்தற்கு எண்ணிச் சென்ற இந்திரசித்தின் கருத்தினையுணராத இராம இலக்குவர் போர்க்கோலம் களைதலும் வானவர் மலர்மழை சொரிந்து வாழ்த்துதலும் (8657-8658)

8657. ‘எல் கொள் நான்முகன் படைக்கலம்
இவர் என்மேல் விடாமுன்
முற்கொள்வேன்‘ எனு முயற்சியன்,
மறைமுறை மொழிந்த
சொல்கொள் வேள்வி போய்த் தொடங்குவான்
அமைந்தவன் துணிவை
மல் கொள் தோளவர் உணர்ந்திலர்;
அவன் திறம் மறந்தார்.
85

8658. அனுமன் அங்கதன் தோளின்நின்று
இழிந்தனர் ஆகி,
தனுவும், வெங்கணைப் புட்டிலும்,
கவசமும், தடக்கைக்கு
இனிய கோதையும் துறந்தனர்
இருந்தனர்; இமையோர்
பனிமலர் பொழிந்து ஆர்த்தனர்,
வாழ்த்து ஒலி பரப்பி.
86

சூரியன் மறைதல்

8659. ஆர்த்த சேனையின் அமலை போய்
விசும்பினை அலைக்க,
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான்
அகன்று இரவி,
‘தீர்த்தன்மேல் அவன் திசைமுகன்
படைக்கலம் செலுத்தப்
பார்க்கிலேன் : முந்திப் படுவல் ‘
என்பான் என, பட்டான்.
87

இராமன், சேனைகட்கு உணவுதேடிக் கொணருமாறு வீடணனுக்குக் கூற, அவன் தமரொடும் விரைந்து செல்லுதல் (8660-8661)

8660. ‘இரவும் நன்பகலும் பெரு
நெடுஞ்செரு இயற்றி,
உரவு நம் படை மெலிந்து உளது;
அருந்துதற்கு உணவு
வரவு தாழ்த்தது; வீடண!
வல்லையின் ஏகி,
தரவு வேண்டினென் ‘என்றனன்,
தாமரைக் கண்ணன்.
88

8661. ‘இன்னதே கடிது இயற்றுவென் ‘
எனத் தொழுது எழுந்தான்,
பொன்னின் மோலியன் வீடணன்,
தமரொடும் போனான்;
கன்னல் ஒன்றில் ஓர் காலினின்
வேலையைக் கடந்தான்;
அன்ன வேலையின் இராமன் ஈது
இளையவற்கு அறைந்தான்.
89

தயெ்வப் படைக்கலங்களுக்குப் பூசனைபுரிய எண்ணிய இராமன் இலக்குவனை நோக்கிச் சேனைகளைக் காக்கும்படி பணித்து, தான் போர்க்களத்தைவிட்டு வேறிடஞ் செல்லுதல்

8662. ‘தயெ்வ வான்பெரும் படைகட்கு
வரன்முறை திருந்து
மெய்கொள் பூசனை இயற்றினம்
விடும் இது விதியால்;
ஐய! நானிவை ஆற்றினன்
வருவது ஓர் அளவும்
கைகொள் சேனையைக் கா‘ எனப்
போர்க்களம் கடந்தான்.
90

தன் தந்தையைக் கண்டு போரில் நிகழ்ந்தவற்றை இந்திரசித்து கூற இராவணன் ‘இனிச் செய்தற்குரியது யாது? ‘என வினவுதல்

8663. தந்தையைக் கண்டு, புகுந்துள
தன்மையும், தன்மேல்
முந்தை நான்முகன் படைக்கலம்
தொடுக்குற்ற முறையும்
சிந்தையுள் புகச் செப்பினன்;
அனையவன் திகைத்தான்,
‘எந்தை! என், இனிச் செயத் தக்கது?
இசை‘ என இசைத்தான்.
91

இந்திரசித்து, இனி செய்யத் தகுவது இதுவெனக் கூறுதல் (8664-8665)

8664. “தன்னைக் கொல்வது துணிவரேல்,
தனக்கு அது தகுமேல்,
முன்னர்க் கொல்லிய முயல்க ‘என்று
அறிஞரே மொழிந்தார்;
அந் நல் போரவர் அறிவுறாவகை
மறைந்து அயன்தன்
வெல் நல் போர்ப்படை விடுதலே
நலம்; இது விதியால்.
92

8665. ‘தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல்
அப்படை தொடுத்தே
தடுப்பர்; காண்பரேல், கொல்லவும்
வல்லர்; அத் தவத்தர்;
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை;
நல் வேள்வியை இயற்றி
முடிப்பல், அன்னவர் வாழ்வை ஓர்
கணத்து‘ என்று முடித்தான்.
93

இந்திரசித்தின் கருத்திற்கிசைந்த இராவணன், மகோதரனை நோக்கி, ‘நீ படையுடன் முன்னதாகச் சென்று மகோதரனை மாயப் போர் புரிக ‘எனப் பணித்தல்(8666-8668)

8666. ‘என்னை அன்னவர் மறந்தனர்
நின்று இகல் இயற்ற
துன்னு போர்ப் படை முடிவு இலாது
அவர்வயின் தூண்டின்
பின்னை, நின்றது புரிவல் ‘என்று
அன்னவன் பேச
மன்னன், முன்நின்ற மகோதரற்கு
இம்மொழி வழங்கும்.
94

8667. ‘வெள்ளம் நூறுடை வெஞ்சினச்
சேனையை, வீர!
அள் இலைப்படை அகம்பனை
முதலிய அரக்கர்
எள் இல் எண் இலர் தம்மொடு
விரைந்தனை ஏகி,
கொள்ளை வெஞ் செரு இயற்றுதி, ‘
மனிதரைக் குறுகி.
95

8668. ‘மாயை என்றன, வல்லன
யாவையும், வழங்கி,
தீ இருள் பெரும் பரப்பினைச்
செறிவு உறத் திருத்தி,
நீ ஒருத்தனே உலகு ஒரு
மூன்றையும் நிமிர்வாய்;
போய் உருத்தவர் உயிர் குடித்து
உதவு ‘எனப் புகன்றான்.
96

மகோதரன் மகிழ்ந்து போருக்குப் புறப்பட்ட நிலையில் உடன்சென்ற நால்வகைச் சேனைகளின் தோற்றம் (8669-8675)

8669. என்ற காலையின், ‘என்றுகொல்
ஏவுவது? ‘என்று
நின்ற வாள் எயிற்று அரக்கனும்
உவகையின் நிமிர்ந்தான்;
சென்று தேர்மிசை ஏறினன்;
இராக்கதர் செறிந்தார்,
குன்று சுற்றிய மதகரிக் குலம்
அன்ன குறியார்.
97

8670. கோடி கோடி நூறாயிரம்
ஆயிரம் குறித்த
ஆடல் யானைகள் அணிதொறும்
அணிதொறும் அமைந்த;
ஓடு தேர்க்குலம் உலப்பு இல
கோடி, வந்து உற்ற;
கேடு இல் வாம்பரி, கணக்கையும்
கடந்தன கிளர்ந்த.
98

8671. படைக்கலங்களும், பருமணிப்
பூண்களும், பகுவாய்
இடைக் கலந்தன எயிற்று
இளம்பிறைகளும் எறிப்ப,
புடைப் பரந்தன வெயில்களும்
நிலாக்களும் புரள,
விடைக் குலங்கள்போல்,
இராக்கதப் பதாதியும் மிடைந்த.
99

8672. கொடிக் குழீஇயன, கொழுந்து
எடுத்து எழுந்து மேற்கொள்ள,
இடிக் குழீஇ எழு மழைப் பெருங்
குலங்களை இரித்த;
அடிக் குழீஇயிடும் இடம் தொறும்
பிதிர்ந்து எழுந்து ஆர்த்த
பொடிக் குழீஇ, அண்டம் படைத்தவன்
கண்ணையும் புதைத்த.
100

8673. ஆனை என்னும் மா மலைகளின்
இழிமத அருவி
வான யாறுகள், வாசி வாய்
நுரையொடு மயங்கி,
கான மாமரம் கல்லொடும்
ஈர்த்தன, கடிதின்
போன, போக்க அரும் பெருமைய,
புணரியுள் புக்க.
101

8674. தடித்து, மீன்குலம் விசும்பிடைத்
தயங்குவ சலத்தின்
மடித்த வாயினர், வாளெயிற்று
அரக்கர், தம் வலத்தின்
பிடித்த திண்படை விதிர்த்திட
விதிர்த்திடப் பிறழ்ந்து
பொடித்த வெம்பொறி, கொதித்து மேல்
போவன போன்ற.
102

8675. சொன்ன நூறுடை வெள்ளம் என்று,
இராவணன் துரந்த
அன்ன சேனையை வாயில் ஊடு
உமிழ்கின்ற அமைதி,
முன்னம் வேலையை, முழுவதும்
குடித்தது ‘முறை ஈது ‘
என்ன மீட்டு உமிழ் தமிழ்முனி
ஒத்தது, அவ் இலங்கை.
103

அரக்கர்க்கும் வானரர்க்கும் இடையே நிகழ்ந்த பெரும்போர் (8676-8681)

8676. சங்கும், பேரியும், தாளமும்,
காளமும், தலைவர்
சிங்க நாதமும், சிலையின் நாண்
ஒலிகளும், சின மாப்
பொங்கும் ஓதையும் புரவியின்
ஓதையும், பொலந் தேர்
வெங்கண் ஓலமும், மால் என,
விழுங்கிய உலகை.
104

8677. புக்க தார்ப் பெரும் போர்ப்படை,
பறந்தலைப் புறத்தில்
தொக்கதால்; நெடு வானரத்
தானையும் துவன்றி
ஒக்க ஆர்த்தன, உறுக்கின,
தழெித்தன, உருத்த
மிக்க வான்படை விடுகணை
மாமழை விலக்கி.
105

8678. குன்று கோடியும் கோடிமேல்
கோடியும் குறித்த
வென்றி வானர வீரர்கள்,
முகம்தொறும் வீச
ஒன்றின், நால்வரும் ஐவரும்
இராக்கதர் உலந்தார்;
பொன்றி வீழ்ந்தன, பொருகரி,
பாய்பரி, பொலந்தேர்.
106

8679. மழுவும், சூலமும், வலயமும்,
நாஞ்சிலும், வாளும்,
எழுவும், ஈட்டியும், தோட்டியும்,
எழுமுனைத் தண்டும்;
தழுவும் வேலொடு கணையமும்,
பகழியும், தாக்க,
குழுவினோடு பட்டு உருண்டன,
வானரக் குலங்கள்.
107

8680. முற்கரங்களும், முசலமும்,
முசுண்டியும், முளையும்,
சக்கரங்களும், பிண்டி
பாலத்தொடு தண்டும்,
கப்பணங்களும், வளையமும்,
கவண் உமிழ் கல்லும்
வெற்பு இனங்களை நுறுக்கின;
கவிகளை வீழ்த்த.
108

8681. கதிர் அயில்படைக் கலம் அவர்
முறைமுறை கடாவ
அதிர் பிணப் பெருங் குன்றுகள்
படப்பட, அழிந்த
உதிரம் உற்ற பேர் ஆறுகள்
திசைதிசை ஓட,
எதிர் நடக்கில குரங்கு இனம்;
அரக்கரும் இயங்கார்.
109

இறந்த வானரர், வானவராதல்

8682. யாவர், ஆங்கு இகல் வானரர்
ஆயினர், எவரும்
தேவர் ஆதலின், அவரொடும்
விசும்பிடைத் திரிந்தார்;
மேவு காதலின் மெலிவுறும்
அரம்பையர் விரும்பி,
ஆவி ஒன்றிடத் தழுவினர்,
பிரிவுநோய் அகன்றார்.
110

இரக்கமற்ற அரக்கர்களும் பெருந் தேவராதல்

8683. கரக்கும் மாயமும், வஞ்சமும்,
களவுமே கடனா,
இரக்கமே முதல் தருமத்தின்
நெறி ஒன்றும் இல்லா
அரக்கரைப் பெருந் தேவர்கள்
ஆக்கின, அமலன்
சரத்தின் மேல் இனிப் பவித்திரம்
உள எனத் தகுமே?
111

இலக்குவன் பெரும் போர் விளைத்தல்

8684. அந்தகன் பெரும் படைக்கலம்
மந்திரத்து அமைத்தான்;
இந்து வெள் எயிற்று அரக்கரும்,
யானையும், தேரும்,
வந்த வந்தன வானகம்
இடம்பெறா வண்ணம்
சிந்தினான் சரம் இலக்குவன்,
முகம்தொறும் திரிந்தான்.
112

கும்பகருணன் கையாண்ட தண்டாயுதம் போர்க்களத்திற் கிடந்ததை அனுமன் தன் கையிற்கொண்டு போர் செய்தல் (8685-8692)

8685. கும்ப கன்னன் ஆண்டு இட்டது,
வயிரம் வான் குன்றின்
வெம்பு வெஞ்சுடர் விரிப்பது,
தேவரை மேல்நாள்
தும்பையின் தலைத் துரந்தது சுடர்
மணித் தண்டு ஒன்று
இம்பர் ஞாலத்தை நெளிப்பது,
மாருதி எடுத்தான்.
113

8686. ‘காற்று அன்று, இதுகனல் அன்று‘ என,
இமையோர் இடைகாணா
ஏற்றம் கடுவிசையோடு, உயர்கொலை
நீடிய இயல்பால்,
சீற்றம் தனது உருவாய், இடை தேறாதது
ஒர் மாறு ஆய்,
கூற்றம், கொடுமுனை வந்த என
கொன்றான், இகல் நின்றான்.
114

8687. வெங்கண் மத மலை மேல், விரை
பரிமேல், விடு தேர்மேல்,
சங்கம் தரு படைவீரர்கள்
உடல்மேல் : அவர் தலைமேல்;
“எங்குமுளன் ஒருவன்‘ என
இரு நான்மறை தரெிக்கும்
செங்கண்ணவன் இவனே ‘‘ எனத்
திரிந்தான் கலை தரெிந்தான்.
115

8688. கிளர்ந்தாரையும் கிடைத்தாரையும்
கிழித்தான், கனல் விழித்தான்;
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை
அரைத்தான், உருக்கரைத்தான்;
வளர்ந்தான் நிலை உணர்ந்தார், ‘உலகு
ஒருமூன்றையும் வலத்தால்
அளந்தானும் முனிவனே? ‘என
இமையோர்களும் அயிர்த்தார்.
116

8689. மத்தக் கரி நெடு மத்தகம்
வகிர்பட்டு உக, மண்மேல்
முத்தின் பொலி முழுமேனியன்,
முகில் விண்தொடு மெய்யான்,
ஒத்து அக் கடையுகம் உற்றுழி,
உறுகால் பொர, உடுமீன்
தொத்தப் பொலி கனகம் கிரி
வெயில் சுற்றியது ஒத்தான்.
117

8690. ‘இடித்தான் நிலம் விசும்போடு ‘என ‘
இட்டான் அடி, எழுந்தான்.
பொடித்தான், கடற் பெருஞ்சேனையை;
பொலம் தண்டு தன் வலத்தால்
பிடித்தான், மதகரி தேர் பரி
பிழம்பு ஆனவை குழம்பா
அடித்தான்; உயிர்குடித்தான்;
எடுத்து ஆர்த்தான்; பகைதீர்த்தான்.
118

8691. நூறாயிரம் மத மால்கரி,
ஒரு நாழிகை நுவல்போது,
ஆறாய், நெடுங் கடுஞ் சோரியின்
அளறு ஆம் வகை அரைப்பான்;
ஏறு ஆயிரம் எனல் ஆய்
எழுவய வீரரை இடறி,
தேறாது உறு கொலை மேவிய
திசை யானையின் திரிந்தான்.
119

8692. தேர் ஏறினர், பரி ஏறினர்,
விடை ஏறினர்; சினவெம்
கார் ஏறினர், மலை ஏறினர்;
கடல் ஏறினர்; பலவெம்
போரேறினர், புகழேறினர்,
புகுந்தார், புடை வளைந்தார்
நேரேறினர் விசும்பு ஏறிட,
நெரித்தான், கதைதிரித்தான்.
120

சுக்கிரீவன் முதலியோர் ஒருவரையொருவர் காணாதவராகி அரக்கர் படைக்கடலில் அமைதல்

8693. அரிகுல மன்னன், நீலன்,
அங்கதன், குமுதன், சாம்பன்,
பருவலிப் பனசன், என்று இப்
படைத்தலை வீரர் யாரும்
பொருசினம் திருகி, வென்றிப்
போர்க்கள மருங்கில் புக்கார்
ஒருவரை ஒருவர் காணார்,
உயர்படைக் கடலின் உள்ளார்.
121

அனுமன் அகம்பனொடு பொருதல் (8694-8703)

8694. தொகும் படை அவுணர் வெள்ளம்
துறைதொறும் அள்ளித் தூவி
நகம் படை ஆகக் கொல்லும்
நரசிங்கம் நடந்தது என்ன
மிகும் படைக் கடலுள் செல்லும்
மாருதி வீர வாழ்க்கை
அகம்பனைக் கிடைத்தான், தண்டால்
அரக்கரை அறைக்கும் கையான்.
122

8695. மலைப் பெரும் கழுதை ஐஞ்ஞூற்று
இரட்டியான், மனத்தில் செல்லும்
தலைத் தடந் தேரன், வில்லன்,
தாருகன் என்னும் தன்மைக்
கொலைத் தொழில் அவுணன், பின்னை,
இராக்கத வேடம் கொண்டான்,
சிலைத்தொழில் குமரன் கொல்ல,
தொல்லை நாள் செருவில் தீர்ந்தான்.
123

8696. ‘பாகசா தனனும், மற்றைப்
பகை அடுந் திகிரி பற்றும்
ஏக சாதனனும், மூன்று
புரமும் பண்டு எரித்துேளானும்
போக, தாம் ஒருவர் மற்று இக்
குரங்கொடு பொரக் கற்றாரே?
ஆக, கூற்று ஆவி உண்பது
இதனின் மேற்று ஆகும் ‘என்றான்.
124

8697. ‘யான் தடேன் என்னின், மற்று இவ்
எழுதிரை வளாகம் என்னாம்?
வான் தடாது; அரக்கர் என்னும்
பெயரையும் மாய்க்கும் ‘என்னா
ஊன் தடா நின்ற வாளிமழை
துரந்து உருத்துச் சென்றான்;
மீன் தொடா நின்ற திண்தோள்
அனுமனும் விரைவின் வந்தான்.
125

8698. தேரொடு களிறும் மாவும்
அரக்கரும் நெருக்கித் தறெ்ற,
காரொடு கனலும் காலும்
கிளர்ந்தது ஓர் காலம் என்ன,
வாரொடு தொடர்ந்த பைம்பொன்
கழலினான் வருதலோடும்,
சூரொடும் தொடர்ந்த தண்டைச்
சுழற்றினான், வயிரத் தோளான்.
126

8699. எற்றின, எறிந்த, வல்லை
ஏவின, எய்த, பெய்த,
முற்றின படைகள் யாவும்,
முறைமுறை முறிந்து சிந்த,
சுற்றின வயிரத் தண்டால்
துகைத்தனன், அமரர் துள்ள;
கற்றிலன், அன்று கற்றான்,
கதையினால் வதையின் கல்வி.
127

8700. அகம்பனும் காணக் காண,
ஐ இருகோடி கைம் மா,
முகம்பயில் கலினப் பாய்மா,
முளை எயிற்று அரக்கர், மூரி
நுகம்பயில் தேரினோடும்
நுறுக்கினன்; நூழில் தீர்த்தான்
உகம்பெயர் ஊழிக் காற்றின்
உலைவு இலா மேரு ஒப்பான்
128

8701. படுகளப் பரப்பை நோக்கி
பாழிவாய் மடித்து, அவ் ஊழிச்
சுடுகனற் பொறிகள் வெங்கண்
தோன்றிட, கொடித்தேர் தூண்டி,
விடுகனல் பகழி மாரி
மழையினும் மும்மை வீசி,
முடுகுறச் சென்று, குன்றின்
முட்டினான், முகிலின் ஆர்ப்பான்.
129

8702. சொரிந்தன பகழி மாரி
தோளினும் மார்பின் மேலும்
தரெிந்தன அசனி போல்வ,
தறெுபொறி பிதிர்வ திக்கின்,
வரிந்தன எருவை மானச்
சிறைகளால், அமரர் மார்பை
அரிந்தன, வடிம்பு பொன்கொண்டு
அணிந்தன, வாங்கு கண்ண.
130

8703. மார்பினும் தோளின் மேலும்,
வாளிவாய் மடுத்த வாயில்,
சோர்பெருங் குருதி சோரத்,
துளங்குவான் தேறா முன்னம்,
தேர் இரண்டு அருகும் பூண்ட
கழுதையும் அச்சும் சிந்த,
சாரதி புரள, வீரத்
தண்டினால் கண்டம் செய்தான்.
131

வில்லினால் அனுமனை வெல்லுதல் அரிதனெ்றுணர்ந்த அகம்பன், தண்டாயுதத்தைக் கொண்டு அனுமனொடு பொருதல் (8704-8709)

8704. ‘வில்லினால் இவனை வெல்வது
அரிது‘ என, நிருதன் வெய்ய
மல்லினால் இயன்ற தோளின்
வலியினால், வானத் தச்சன்
கொல்லினால் அமைத்தது ஆண்டு
ஓர் கொடுமுனைத் தண்டு கொண்டான்
அல்லினால் வகுத்தது அன்ன
மேனியான், கடலின் ஆர்ப்பான்.
132

8705. ‘இன்று இவன்தன்னை விண்ணாடு
ஏற்றி, வாள் இலங்கை வேந்தை
வென்றியன் ஆக்கி, மற்றை
மனிதரை வெறியர் ஆக்கி,
நின்று, உயர் நெடிய துன்பம்
அமரர் பால் நிறுப்பல் ‘என்னாச்
சென்றனன் அரக்கன்; ‘நன்று
வருக‘ என அனுமன் சேர்ந்தான்.
133

8706. தாக்கினார்; வலத்தும் மற்றை
இடத்தினும் திரிந்தார் சாரி;
ஓக்கினார், ஊழின் ஆர்ப்புக்
கொட்டினார்; கிட்டினார்; கீழ்த்
தூக்கினார், சுழற்றினார்; மேல்
சுற்றினார்; எற்ற, எற்றி
நீக்கினார், நெருங்கினார் போய்;
நெருக்கினார், நீங்கினார் மேல்.
134

8707. தட்டினார்; தழுவினார்; மேல்
தாவினார்; தரையினோடும்
கிட்டினார்; கிடைத்தார், வீசிப்
புடைத்தனர் கீழும் மேலும்;
கட்டினார்; காத்தார்; ஒன்றும்
காண்கிலார், இறவு; கண்ணுற்று
ஒட்டினார்; மோதி, வட்டம்
ஓடினார்; ஆதி போனார்.
135

8708. மையொடும் பகைத்து நின்ற
நிறத்தினான் வயிர மார்பில்,
பொய்யொடும் பகைத்து நின்ற
குணத்தினான் புகுந்து மோத,
வெய்யவன், அதனைத் தண்டால்
விலக்கினான்; விலக்கலோடும்,
கையொடும் இற்று மற்று
அக்கதை களம் கண்டது அன்றே.
136

8709. கையொடு தண்டு நீங்க,
கடலெனக் கலக்கம் உற்ற
மெய்யொடு நின்ற வெய்யோன்,
மிடல் உடை இடக்கை ஓச்சி,
ஐயனை, அலங்கல் ஆகத்து
அடித்தனன்; அடித்த ஓசை,
ஒய் என வயிரக் குன்றத்து
உருமினேறு இடித்தது ஒத்த.
137

வெறுங்கையனாய் நின்ற அகம்பனை அனுமன் கையாற் குத்தி வீழ்த்துதல் (8710-8711)

8710. அடித்தவன் தன்னை நோக்கி,
அசனி ஏறு அனைய தண்டு
பிடித்து நின்றேயும் எற்றான்,
‘வெறுங்கையான், பிழையிற்று ‘என்னா,
மடித்து வாய், இடத்த கையால்
மார்பிடைக் குத்த, வாயால்
குடித்து நின்று உமிழ்வான் என்னக்
கக்கினன், குருதி வெள்ளம்.
138

8711. மீட்டும் அக்கையால் வீசி,
செவித் தலத்து எற்ற, வீழ்ந்தான்;
கூட்டினான் உயிரை, விண்ணோர்
குழாத்திடை; அரக்கர் கூட்டம்
காட்டில் வாழ் விலங்கு மாக்கள்
கோள் அரி கண்ட என்ன,
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம்
இரிந்தன, திசைகள் எங்கும்.
139

இலக்குவன் அம்பால் அரக்கர் சேனை மாளுதல்

8712. மாண்டனன் அகம்பன்; மண்மேல்
மடிந்தன நிருதர் சேனை;
மீண்டனர் குரக்கு வீரர்;
விழுந்தன சினக் கை வேழம்;
தூண்டின கொடித்தேர் அற்றுத்
துணிந்தன தொடுத்த வாசி;
ஆண்தகை இளைய வீரன்
அடுசிலை பொழியும் அம்பால்.
140

இலக்குவன் இருக்கும் சூழல் இதுவென அறியாது அனுமன் கலக்கமுறுதல்

8713. ஆர்க்கின்ற குரலும் கேளான்;
இலக்குவன் அசனி ஏற்றைப்
பேர்க்கின்ற சிலையின் நாணின்
பேரொலி கேளான்; வீரர்
யார்க்கு இன்னல் உற்றது என்பது
உணர்ந்திலன்; இசைப்போர் இல்லை;
போர்க்குன்றம் அனைய தோளான்
இனையது ஓர் பொருமல் உற்றான்.
141

அரக்கருடைய படைக் கடலினிடையே அங்கதன் முதலியோர் ஒருவரையொருவர் காணமுடியாத நிலையில் சேய்மையில் நிற்றல்

8714. வீசின நிருதர் சேனை
வேலையில் தனெ்மேல் திக்கின்
யோசனை ஏழு சென்றான்
அங்கதன்; அதனுக்கு அப்பால்
ஆசையின் இரட்டி சென்றான்
அரிகுலத்து அரசன்; அப்பால்
ஈசனுக்கு இளைய வீரன்
இரட்டிக்கும் இரட்டி சென்றான்.
142

அனுமன் இலக்குவன் நின்ற இடத்திற்கு இரண்டு மூன்று காத தூரத்திற்கு அண்மையில் அடைதல்

8715. மற்றையோர் நாலும் ஐந்தும்
யோசனை மலைந்து புக்கார்;
கொற்ற மாருதியும், வள்ளல்
இலக்குவன் நின்ற சூழல்
முற்றினன்; இரண்டு மூன்று
காவதம் ஒழியப் பின்னும்
சுற்றிய சேனை நீர்மேற்
பாசியின் மிடைந்து துன்ன.
143

அனுமன், இலக்குவனால் நிகழ்த்தப்பட்ட போரின் பல்வேறு அடையாளங்களைக் காணுதல் (8716-8723)

8716. ‘இளையவன் நின்ற சூழல்
எய்துவென் விரைவின் ‘என்று, ஓர்
உளைவு வந்து உள்ளம் தூண்ட,
ஊழி வெங் காலின் செல்வான்,
களைவு அருந் துன்பம் நீங்கக்
கண்டனன் என்ப மன்னோ
விளைவன செருவில் பல்வேறு
ஆயின குறிகள் மேய.
144

8717. ஆனையின் கோடும், பீலித்
தழைகளும், ஆரத் தோடு
மான மா மணியும், பொன்னும்,
முத்தமும், கொழித்து வாரி,
மீனென அங்கும் இங்கும்
படைக்கலம் மிளிர, வீசும்
பேன வெண் குடைய ஆய,
குருதிப் பேர் ஆறு கண்டான்.
145

8718. ஆசைகள் தோறும் சுற்றி
அலைக்கின்ற அரக்கர்தம் மேல்
வீசின பகழி, அற்ற
தலையொடும் விசும்பை முட்டி,
ஓசையின் உலகம் எங்கும்
உதிர்வுற, ஊழி நாளில்
காசு அறு கல்லின் மாரி
பொழிவபோல், விழுவ கண்டான்.
146

8719. மான வேல் அரக்கர் விட்ட
படைக்கலம், வான மாரி
ஆனவன் பகழி சிந்தத்
திசையொடும் பொறியோடு அற்ற,
மீனினம் விசும்பினின்றும்
இருள் உக வீழ்வ போல,
கானகம் தொடர்ந்த தீயின்
சுடுவன பலவும் கண்டான்.
147

8720. அருளுடைக் குரிசில் வாளி,
அந்தரம் எங்கும் தாமாய்,
தரெுள் உற தொடர்ந்து வீசிச்
செல்வன தேவர் காண
இருளிடைச் சுடலை ஆடும்
எண் புயதது அண்ணல் வண்ணச்
சுருளுடைச் சடையின் கற்றைச்
சுற்று எனச் சுடர்வ கண்டான்.
148

8721. நெய் உறக் கொளுத்தப் பட்ட
நெருப்பு என, பொருப்பின் ஓங்கும்
மெய் உறக் குருதி தாரை
விசும்பு உற விளங்கு கின்ற,
ஐயனை, கங்குல் மாலை,
அரசு என அறிந்து, காலம்
கைவிளக்கு எடுத்தது அன்ன
கவந்தத்தின் காடு கண்டான்.
149

8722. ஆளெலாம் இழந்த தேரும்
ஆனையும் ஆடல் மாவும்,
நாளெலாம் எண்ணினாலும்
தொலைவு இல, நாதர் இன்றி,
தாள் எலாம் குலைய ஓடித்
திரிவன; தாங்கள் ஆற்றும்
கோள் இலா மன்னன் நாட்டுக்
குடி எனக் குலைவ கண்டான்.
150

8723. மிடல்கொளும் பகழி, மாரி
வானினும் மும்மை வீசி,
மடல்கொளும் அலங்கல் மார்பன்
மலைந்திட, உலைந்து மாண்டார்
உடல்களும் உதிர நீரும்,
ஒளிர்படைக் கலமும், உற்ற
கடல்களும்; நெடிய கானும்,
கார் தவழ் மலையும் கண்டான்.
151

இலக்குவனது நாணொலிகேட்டு மகிழ்ந்த அனுமன் ஆரவாரித்தல்

8724. சுழித்து எறி ஊழிக் காலின்
துருவினன் தொடரும் தோன்றல்,
தழிக்கொண்ட குருதி வேலை
தாவுவான், ‘தனிப்பேர் அண்டம் ‘
கிழித்தது, கிழித்தது ‘என்னும்
நாண் உரும் ஏறு கேட்டான்;
அழித்து ஒழிகாலத்து ஆர்க்கும்
ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான்.
152

தன்னையடைந்து வணங்கிய அனுமனை இலக்குவன் தழுவிக் கொண்டு, வானர வீரர்களைக் குறித்து வினாவுதல் (8725-8726)

8725. ஆர்த்த பேர் அமலை கேளா,
‘அணுகினன் அனுமன்; எல்லார்
வார்த்தையும் கேட்கல் ஆகும் ‘
என்று அகம் மகிழ்ந்து, வள்ளல்
பார்ப்பதன் முன்னம் வந்து
பணிந்தனன்; விசயப் பாவை
தூர்த்தனை இளைய வீரன்
தழுவினன் இனைய சொன்னான்.
153

8726. ‘அரிகுல வீரர், ஐய! யாண்டையர்?
அருக்கன் மைந்தன்
பிரிவு உனைச் செய்தது எவ்வாறு?
அங்கதன் பிரிந்தது எங்கே?
விரி இருள் பரவைச்சேனை
வெள்ளத்து விளைந்தது ஒன்றும்
தரெிகிலன் த்தி ‘என்றான்;
சென்னிமேல் கையன் சொல்வான்.
154

வானர வீரர்களைப்பற்றித் தான் ஒன்றும் அறிந்திலாமையை அனுமன் தரெிவித்தல்

8727. ‘போயினார் போயவாறு
போயினது அன்றி, போரில்
ஆயினார் ஆயது ஒன்றும்
அறிந்திலென், ஐய! யாரும்
மேயினார் மேய போதே
தரெிவது, விளைந்தது ‘என்றான்
தாயினான் வேலையோடும்
அயிந்திரப் பரவை தன்னை.
155

போர்க்களத்தில் ஒருவரையொருவர் அறியவியலாத நிலையில் உளதாய மயக்கத்தை யொழித்ததற்கு அனுமன் உபாயங் கூறுதல்

8728. ‘மந்திரம் உளதால், ஐய!
உணர்வுறும் மாலைத்து; அஃது, உன்
சிந்தையின் உணர்ந்து, செய்யற்
பாற்றுஎனின் செய்தி; தவெ்வர்
தந்திரம் இதனைத் தயெ்வப்
படைகளால் சமைப்பின் அல்லால்
எந்தை! நின் அடியர் யாரும்
எய்தலர், நின்னை ‘என்றான்.
156

இலக்குவன் இராமபிரானை நினைந்து வாழ்த்தி அரக்கர்மேற் சிவன்படை தொடுத்தல்

8729. ‘அன்னது புரிவன் ‘என்னா,
ஆயிர நாமத்து அண்ணல்
தன்னையே வணங்கி வாழ்த்தி,
சரங்களைத் தரெிந்து தாங்கி,
பொன் மலை வில்லினான் தன்
படைக்கலம் பொருந்தப் பற்றி,
மின் எயிற்று அரக்கர் தம்மேல்
ஏவினான் வில்லின் செல்வன்.
157

இலக்குவன் ஏவிய பாசுபதப் படையினால் அரக்கர் சேனையழிய இருள் நீங்குதல்கண்டு தேவர்கள் மயக்கந்தீர்தல்

8730. முக்கணான் படையை மூட்டி
விடுதலும், மூங்கில் காட்டில்
புக்கது ஓர் ஊழித் தீயின்,
புறத்தின் ஓர் உருவும் போகாது
அக்கணத்து எரிந்து வீழ்ந்தது,
அரக்கர்தம் சேனை; ஆழித்
திக்கு எலாம் இருளும் தீர்ந்த
தேவரும் மயக்கம் தீர்ந்தார்.
158

மாயை நீங்கினமையால் வானர வீரர்கள் இலக்குவனை வந்தடைதல் (8731-8732)

8731. தேவர்தம் படையை விட்டான்
என்பது சிந்தை செய்யா,
மாபெரும் மாயை நீங்க
மகோதரன் மறையப் போனான்;
ஏவரும் பிரிந்தார் எல்லாம்,
இன மழை இரிய ஆர்த்து,
கோ இளங் களிற்றை வந்து
கூடினார்; ஆடல் கொண்டார்.
159

8732. யாவர்க்கும் தீது இலாமை
கண்டுகண்டு, உவகை ஏற,
தேவர்க்கும் தேவன் தம்பி
திரு மனத்து ஐயம் தீர்ந்தான்;
காவல் போர்க் குரக்குச் சேனை
கல்லெனக் கலந்து புல்ல
பூவர்க்கம் இமையோர் தூவப்
பொலிந்தனர்; தூதர் போனார்.
160

அரக்கராகிய தூதர்கள் சென்று இராவணனுக்கும் இந்திரசித்திற்கும் போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தல் (8733-8735)

8733. இலங்கையர் கோனை எய்தி,
எய்தியது த்தார்; ‘நீவிர்
விலங்கினிர் போலும்; வெள்ளம்
நூற்றை ஓர் வில்லால், வேழக்
குலங்களினோடும் கொல்லக்
கூடுமோ? என்ன, ‘கொன்றை
அலங்கலான் படையின் ‘என்றார்;
‘அன்னதேல், ஆகும் ‘என்றான்.
161

8734. ‘தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு
உணர்த்துமின் ‘என்னச் சொன்னான்;
ஓடினார், சாரர் வல்லை
உணர்த்தினர்; துணுக்கம் எய்தா,
ஆடவர் திலகன், ‘யாண்டையான்
இகல் அனுமன்? ஏனோர்,
வீடணன் யாங்கண் உள்ளார்?
உணர்த்துமின் விரைவின் ‘என்றான்.
162

8735. ‘வந்திலன் இராமன்; வேறு ஓர்
மலை உளான்; உந்தை மாயம்
தந்தன தீர்ப்பான் போனான்,
உண்பன தாழ்க்க தாழாது;
எந்தை! ஈது இயன்றது‘ என்றார்;
‘மகோதரன் யாண்டை? ‘என்றான்;
‘அந்தரத்திடையான் ‘என்ன,
இராவணி ‘அழகிது ‘என்றான்.
163

பிரமாத்திரத்தினைப் பகைவர்மேல் ஏவுதற்கு இதுவே ஏற்றகாலம் ‘என எண்ணிய இந்திரசித்து முறைப்படி வேள்வியினைச் செய்தல் (8736-8737)

8736. ‘காலம் ஈது‘ எனக் கருதிய
இராவணன் காதல்,
ஆல மாமரம் ஒன்றினை
விரைவினில் அடைந்தான்;
மூல வேள்விக்கு வேண்டுவ
கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கதப்
பூசுரர் கொணர்ந்தார்.
164

8737. அம்பினால் பெருஞ் சமிதைகள்
அமைத்தனன்; அனலில்
தும்பை மாமலர் தூவினன்;
காரி எள் சொரிந்தான்;
கொம்பு பல்லொடு, கரிய
வெள்ளாட்டு இருங்குருதி,
வெம்பு வெந் தசை முறையின் இட்டு,
எண்ணெயால் வேட்டான்
165

வேள்வி முற்றிய இந்திரசித்து பிரமாத்திரத்துடன் வானிற்சென்று மறைந்திருத்தல் (8738-8739)

8738. வலம் சுழித்து வந்து எழுந்து எரி
நறுவெறி வயங்கி,
நலம் சுரந்தன பெருங்குறி
முறைமையின் நல்க,
குலம் சுரந்து எழு கொடுமையான்,
முறையினின் கொண்டே,
‘நிலம் சுரந்து எழும் வென்றி ‘
என்று உம்பரின் நிமிர்ந்தான்.
166

8739. விசும்பு போயினன், மாயையின்
பெருமையான்; மேலைப்
பசும்பொன் நாட்டவர் நாட்டமும்
உள்ளமும் படரா,
அசும்பு விண்ணிடை அடங்கினன்;
முனிவரும் அறியார்;
தசும்பு நுண்நெடுங் கோெளாடு
காலமும் சார.
167

மகோதரன் மாயையினால் இந்திரனாக வெள்ளை யானையின் மேல் அமர்ந்து போருக்கு வர, அது கண்டு வானரர் திகைப்புற்று வருந்துதல் (8740-8742)

8740. அனையன் நின்றனன்; அவ் வழி
மகோதரன் அறிந்து, ஓர்
வினையம் எண்ணினன், இந்திர
வேடத்தை மேவி,
துனை வலத்து அயிராவதத்து
எருத்தின்மேல் தோன்றி,
முனைவர் வானவர் அவரொடும்
போர் செய மூண்டான்.
168

8741. ‘அரக்கர் மானிடர் குரங்கு எனும்
அவை எல்லாம் அல்லா
உருக்கள் யா உள உயிர் இனி
உலகத்தின் உழல்வ,
தருக்கு போர்க்கு உடன்
வந்துளவாம் ‘எனச் சமைத்தான்;
வெருக் கொளப் பெருங் கவிப்படை
குலைந்தது, விலங்கி.
169

8742. ‘கோடு நான்குடைப் பால்நிறக்
குன்றமேல் கொண்டான்
ஆடல் இந்திரன்; அல்லவர்
யாவரும் அமரர்,
சேடர், சிந்தனை முனிவர்கள்;
அமரர் பொரச் சீறி
ஊடு வந்து உற்றது என்கொலோ,
நிபம்? ‘என உலைந்தார்.
170

முனிவர், வானவர் முதலியோர் நம்முடன் போர்செய்ய வருவதற்குக் காரணம் யாது? ‘என இலக்குவன் அனுமனை நோக்கி வினவுதல்

8743. அனுமன் வாள்முகம் நோக்கினன்,
ஆழியை அகற்றித்
தனு வலம் கொண்ட தாமரைக்
கண்ணவன் தம்பி,
‘முனிவர் வானவர் முனிந்து
வந்து எய்த, யாம் முயன்ற
துனி இது என்கொலோ? சொல்லுதி,
உணர்ந்து ‘எனச்சொன்னான்.
171

அந் நிலையில் இந்திரசித்து பிரமாத்திரத்தை இலக்குவன்மேல் ஏவுதல்

8744. இன்ன காலையின் இலக்குவன்
மேனிமேல் எய்தான்,
முன்னை நான்முகன் படைக்கலம்;
இமைப்பதன் முன்னம்
பொன்னின் மால்வரைக் குரீஇ
இனம் மொய்ப்பது போல,
மன்னல் ஆம் தரம் அல்லன
சுடர்க்கணை பாய்ந்த.
172

பிரமாத்திரத்தால் தாக்கப்பட்டு இலக்குவன் உணர்வற்று வீழ்தல்

8745. கோடி, கோடி, நூறாயிரம்
சுடர்க்கணைக் குழாங்கள்
மூடி மேனியை முற்றுறச்
சுற்றின மூழ்க,
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன்,
உணர்வு புக்கு ஒடுங்க,
ஆடல் மாக்கரி சேவகம்
அமைந்தனெ, அசைந்தான்.
173

இந்திரனாகி வந்தவனை அந்தரத்து எற்றுவேன் ‘என எழுந்த அனுமன் பிரமாத்திரத்தால் அயர்ந்து வீழ்தல்

8746. அனுமன், ‘இந்திரன் வந்தவன்
என்கொல், இது அமைந்தான்?
இனி என்? எற்றுவன், களிற்றினோடு
எடுத்து‘ என எழுந்தான்,
தனுவின் ஆயிர கோடி வெங்
கடுங்கணை தைக்க,
நினைவும் செய்கையும் மறந்துபோய்,
நெடுநிலம் சேர்ந்தான்.
174

சுக்கிரீவன் வீழ்தல்

8747. அருக்கன் மாமகன், ஆடகக்
குன்றின்மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆமெனக்
குருதி நீர் முடுக,
தருக்கி வெஞ்சரம் தலைத்தலை
மயங்கின தைக்க
உருக்கு செம்பு அன்ன கண்ணினன்,
நெடுநிலம் உற்றான்.
175

அங்கதனும் சாம்பனும் தரையிற் சாய்தல்

8748. அங்கதன் பதினாயிரம் அயில்
கணை அழுந்த,
சிங்க ஏறு இடி உண்டென
நெடுநிலம் சேர்ந்தான்;
சங்கம் ஏறிய பெரும்புகழ்ச்
சாம்பனும் சாய்ந்தான்;
துங்க மார்பையும் தோளையும்
வடிக்கணை தொளைக்க.
176

நீலன், இடபன், பனசன், குமுதன்
ஆகியோர் உயிர் நீத்தல

8749. நீலன், ஆயிரம் வடிக்கணை
நிறம் புக்கு நெருங்க,
காலனார் முகம் கண்டனன்;
இடபன் விண் கலந்தான்;
ஆலமே அன்ன பகழியால்,
பனசனும் அயர்ந்தான்;
கோலின் மேவிய கூற்றினால்,
குமுதனும் குறைந்தான்.
177

நளன், மயிந்தன், துமிந்தன், கவயன், கேசரி என்போர் மடிதல்

8750. வேலை தட்டவன், ஆயிரம்
பகழியால் வீழ்ந்தான்;
வாலி நேர் வலி மயிந்தனும்
துமிந்தனும் மடிந்தார்;
கால வெந்தொழில் கவயனும்
வானகம் கண்டான்;
மாலை வாளியின் கேசரி
மண்ணிடை மடிந்தான்.
178

சதவலி, சுசேடணன், கந்தமாதனன், இடும்பன், ததிமுகன் என்போர் இறத்தல்

8751. விந்தம் அன்ன தோள் சதவலி,
சுசேடணன், வினதன்,
கெந்த மாதனன், இடும்பன், வன்
ததிமுகன், கிளர
உந்து வார்கணை கோடி தம்
உடலம் உற்று ஒளிப்ப,
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர்,
மண்ணுறச் சாய்ந்தார்.
179

பிரமாத்திரத்தால் தாக்கப்பட்டு வானரவீரர் அனைவரும் இறந்துகிடக்கும் போர்க்களத்தின் தோற்றம் (8752-8754)

8752. மற்றை வீரர்கள் யாவரும்
வடிக்கணை மழையால்
முற்றும் வீந்தனர்; முழங்குபேர்
உதிரத்தின் முந்நீர்
எற்று வான்திரைக் கடலொடு
பொருது சென்று ஏற,
ஒற்றை வார்கணை ஆயிரம்
குரங்கினை உருட்ட.
180

8753. தளைத்து வைத்தது, சதுமுகன்
பெரும்படை தள்ளி
ஒளிக்க, மற்றொரு புகலிடம்
உணர்கிலர்; உருமின்
வளைத்து வித்திய வாளியால்,
மண்ணொடும் திண்ணம்
முளைப் புடைத்தன ஒத்தன;
வானரம் முடிந்த.
181

8754. குவளைக் கண்ணினை வானவர்
மடந்தையர் கோட்டித்
துவள, பாரிடைக் கிடந்தனர்;
குருதிநீர் சுற்றித்
திவள, கீழொடு மேல்
புடைபரந்து இடைசெறிய,
பவளக் காடுடைப் பாற்கடல்
ஒத்தது, அப்பரவை.
182

தம் உடம்பினைத் துறந்து விண்ணிற்சென்ற வானர வீரர்களை வானவர்கள் உபசரித்து மீட்டும் மண்ணுலகிற் செல்லுமாறு வற்புறுத்துதல் (8755-8757)

8755. விண்ணில் சென்றது, கவிக்குலப்
பெரும்படை வெள்ளம்;
கண்ணில் கண்டனர் வானவர்,
விருந்து எனக் கலந்தார்,
உள் நிற்கும் பெருங் களிப்பினர்,
அளவளாய் உவந்தார்;
‘மண்ணில் செல்லுதிர் இக் கணத்தே ‘
என வலித்தார்.
183

8756. ‘பார் படைத்தவன் படைக்கு
ஒருபூசனை படைத்தீர்;
நீர்படக் கடவீர் அலீர்;
வரிசிலை நெடியோன்
பேர் படைத்தவர்க்கு அடியவர்க்கு
அடியரும் பெறுவார்,
வேர் படைத்த வெம் பிறவியில்
துவக்குணா, வீடு.
184

8757. ‘நங்கள் காரியம் இயற்றுவான்
நிலத்திடை நடந்தீர்;
உங்கள் ஆருயிர் எம் உயிர்;
உடல் பிறிது உற்றீர்;
செங்கண் நாயகற்காக வெங் களத்து
உயிர் தீர்ந்தீர்;
எங்கள் நாயகர் நீர்கள்‘ என்று,
இமையவர் இசைத்தார்.
185

வானரக் குழுவுடன் இலக்குவன் இறந்தான்; இராமன் இங்கு வந்திலன் ‘என எண்ணிய இந்திரசித்து வெற்றிச் சங்கினை ஊதி இராவணனை அடைந்து நிகழ்ந்தன கூறுதல்

8758. ‘வெங்கண் வானரக் குழுவொடும்
இளையவன் விளிந்தான்;
இங்கு வந்திலன், அகன்றனன்
இராமன்‘ என்று இகழ்ந்தான்;
சங்கம் ஊதினன்; தாதையை
வல்லையில் சார்ந்தான்;
பொங்கு போரிடைப் புகுந்துள
பொருள் எலாம் புகன்றான்.
186

இராமன் இறந்திலனோ? ‘என வினவிய இராவணனுக்கு அவன் அங்கு இல்லாமையை இந்திரசித்து எடுத்துரைத்தல்.

8759. ‘இறந்திலன்கொல் அவ் இராமன்? ‘என்று
இராவணன் இசைத்தான்;
‘துறந்து நீங்கினன்; அல்லனேல்,
தம்பியைத் தொலைத்து,
சிறந்த நண்பரைக் கொன்று, தன்
சேனையைச் சிதைக்க,
மறந்து நிற்குமோ, மற்று அவன்
திறன்? ‘என்றான் ‘மதலை
187

இந்திரசித்தும் மகோதரனும் தத்தம் இருப்பிடம் சேர்தல்

8760. ‘அன்னதே ‘என அரக்கனும்
ஆதரித்து அமைந்தான்;
சொன்ன மைந்தனும், தன் பெருங்
கோயிலைத் தொடர்ந்தான்;
மன்னன் ஏவலின், மகோதரன்
போயினன், வந்தான்;
என்னை ஆளுடை நாயகன்
வேறு இடத்து இருந்தான்.
188

வேறிடத்திருந்து படைக்கலங்களுக்கு வழிபாடியற்றிய இராமன் அக்கினிப் படையினால் இருளை அகற்றிப் போர்க்களத்தை அடைதல் (8761-8762)

8761. செய்ய தாமரை நாள்மலர்க்
கைத்தலம் சேப்ப,
துய்ய தேவர்தம் படைக்கு எலாம்
வரன்முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை
இயற்றி, மேல், வீரன்,
‘மொய்கொள் போர்க்களத்து எய்துவாம்
இனி‘ என முயன்றான்.
189

8762. கொள்ளியின் சுடர் அனலிதன்
பகழி கைக் கொண்டான்;
அள்ளி நுங்கலாம் ஆர் இருள்
பிழம்பினை அழித்தான்;
வெள்ள வெங் களப் பரப்பினைப்
பொருக்கென விழித்தான்;
தள்ளில், தாமரைச் சேவடி
நுடங்குறச் சார்ந்தான்.
190

இராமன், போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் சுக்கிரீவன் முதலிய வானரத் தலைவரைத் தனித்தனி கண்டு வருந்துதல் (8763-8764)

8763. நோக்கினான் பெருந் திசைதொறும்,
முறை முறைநோக்கி,
ஊக்கினான், தடந் தாமரைத்
திரு முகத்து உதிரம்
போக்கினான்; நிணப் பறந்தலை
அழுவத்துள் புக்கான்;
காக்கும் வானரத் தலைவரைத்
தனித்தனி கண்டான்.
191

8764. சுக்கிரீவனை நோக்கி, தன்
தாமரைத் துணைக்கண்
உக்க நீர்த்திரள் ஒழுகிட,
நெடிது நின்று உயிர்த்தான்;
‘தக்கதோ இது நினக்கு? ‘என்று,
தனிமனம் தளர்ந்தான்;
பக்கம் நோக்கினன்; மாருதி
தன்மையைப் பார்த்தான்.
192

அனுமனது நிலைகண்டு இராமன் அழுது புலம்புதல்
(8765-8766)

8765. ‘கடல்கடந்து புக்கு அரக்கரைக்
கருவொடும் கலக்கி,
இடர் கடந்து நான் இருக்க,
நீ நல்கியது இதற்கோ?
உடல் கடந்தனவோ, உனை
அரக்கன் வில் உதைத்த
அடல் கடந்த போர் வாளி? ‘
என்று ஆகுலித்து அழுதான்.
193

8766. ‘முன்னைத் தேவர்தம் வரங்களும்,
முனிவர்தம் மொழியும்,
பின்னைச் சானகி உதவியும்
பிழைத்தன பிறந்த
புன்மைச்செய் தொழில் என் வினைக்
கொடுமையால்; புகழோய்!
என்னைப் போல்பவர் ஆருளர்,
ஒருவர்? ‘என்று இசைத்தான்.
194

இராமன், தன்னை நொந்துரைத்தல் (8767-8768)

8767. புன்தொழில் புலை அரசினை
வெஃகி என் பூண்டேன்?
கொன்று ஒருக்கினேன், எந்தையை;
சடாயுவைக் குறைத்தேன்;
இன்று ஒருக்கினேன், இத்தனை
வீரரை; இருந்தேன்;
வன்தொழிற்கு ஒரு வரம்பும்
உண்டாய் வரவற்றோ?
195

8768. ‘தமையனைக் கொன்று, தம்பிக்கு
வானரத் தலைமை
அமைய நல்கினென், அடங்கலும்
அவிப்பதற்கு அமைந்தேன்;
கமை பிடித்து நின்று, உங்களை
இத்துணை கண்டேன்;
சுமை உடல் பொறை சுமக்க வந்தேன் ‘
எனச் சொன்னான்.
196

விழுந்துகிடக்கின்ற அங்கதனை நோக்கி அழுதல்

8769. விடைக் குலங்களின் நடுவண் ஓர்
விடை கிடந்து என்ன
கடைக்கண் தீ உக, அங்கதக்
களிற்றினைக் கண்டான்;
‘படைக் கலங்களைச் சுமக்கின்ற
பதகனேன், பழி பார்த்து
அடைக்கலப் பொருள் காத்தவாறு
அழகிது ‘என்று அழுதான்.
197

இராமன், பிரமாத்திரத்தால் தாக்குண்டு கிடக்கும் தம்பியைக் காணுதல்

8770. உடலிடைத் தொடர் பகழியின்
ஒளிர்கதிர்க் கற்றை,
சுடருடைப் பெருங் குருதியில்
பாம்பு என, சுமந்த
மிடல் உடை பணம் மீமிசை,
தான், பண்டை வெள்ளைக்
கடலிடைத் துயில்வான் அன்ன
தம்பியைக் கண்டான்.
198

இராமன் ஆற்றொணாத் துயருற்று உணர்வு ஒடுங்குதல்
(8771-8773)

8771. பொருமினான், அகம்; பொங்கினான்;
உயிர் முற்றும் புகைந்தான்;
குரு மணித் திருமேனியும்,
மனம் எனக் குலைந்தான்;
தருமம் நின்று தன் கண் புடைத்து
அலமரச் சாய்ந்தான்;
உருமினால் இடியுண்டது ஓர்
மராமரம் ஒத்தான்.
199

8772. உயிர்த்திலன் ஒரு நாழிகை;
உணர்ந்திலன் ஒன்றும்;
வியர்த்திலன் உடல்; விழித்திலன்
கண் இணை; விண்ணோர்
அயிர்த்து, ‘இலன்கொல்? ‘என்று
அஞ்சினர்; அங்கையும் தாளும்
பெயர்த்திலன்; உயிர் பிரிந்திலன்
கருணையால் பிறந்தான்.
200

8773. தாங்குவார் இல்லை; தம்பியைத்
தழீஇக்கொண்ட தடக்கை
வாங்குவார் இல்லை; வாக்கினால்
தரெுட்டுவார் இல்லை;
பாங்கர் ஆயினார் யாவரும்
பட்டனர்; பட்ட
தீங்குதான் இது; தமியனை
யார்துயர் தீர்ப்பார்.
201

இராமனைத் தேற்றுவாரில்லாத போர்க்களத்தின் தோற்றம்

8774. கவந்த பந்தமும், கழுதும்,
தம் கணவரைக் காணார்
சிவந்த கண்ணியர் தேடினர்
திரிபவர் திரளும்,
உவந்த சாதகர் ஈட்டமும்,
ஓரியின் ஒழுக்கும்,
நிவந்த; அல்லது பிறர் இல்லை,
களத்திடை நின்றார்.
202

இராமனது துயர்கண்டு தேவர் முதலிய யாவரும் வருந்துதல்

8775. வான நாடியர் வயிறு அலைத்து
அழுது, கண் மழைநீர்
சோனை மாரியின் சொரிந்தனர்;
தேவரும் சோர்ந்தார்;
ஏனை நிற்பவும் திரிபவும்
இரங்கின, எவையும்
ஞான நாயகன் உருவமே
ஆதலின் நடுங்கி.
203

8776. முகையின் நாள்மலர்க் கிழவற்கும்
முக்கணான் தனக்கும்
நகையின் நீங்கின, திருமுகம்,
கருணை உள் நலிய;
தொகையுள் நின்றவர்க்கு உற்றன
சொல்லி என்? தொடர்ந்த
பகையும் பார்த்தன்று; பாவமும்
கலுழ்ந்தது, பரிவால்.
204

இராமன், சிறிது உணர்வு வரப்பெற்றுக் கண் விழித்துப் பார்த்து தம்பி இலக்குவன் இறந்தான் என்பதனை யுணர்ந்து பலவாறு புலம்புதல் (8777-8792)

8777. அண்ணலும், சிறிது உணர்வினோடு
அயாவுயிர்ப்பு அணுகி,
கண் விழித்தனன்; தம்பியைத்
தரெிவுறக் கண்டான்;
‘விண்ணை உற்றனன்; மீள்கிலன் ‘
என்று, அகம் வெதும்பி,
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன
துயரினன் புலம்பும்.
205

8778. ‘எந்தை இறந்தான் ‘என்றும்,
இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனன் என்னும் கொள்கை
தவிர்ந்தேன் தனி அல்லேன்,
கந்தன் இருந்தாய்நீ என,
நின்றேன்; இது காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென்,
ஐயா! இனி வாழேன்.
206

8779. ‘தாயோ நீயே; தந்தையும்
நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும்
நீயே; திரு நீயே;
போயோ நின்றாய், என்னை
இகந்தாய், புகழ் பாராய்,
நீயோ; நானும் நின்றனன்;
நெஞ்சம் வலியேனோ!
207

8780. ‘ஊறா நின்ற புண்ணுடையாய்பால்
உயிர் காணேன்;
ஆறா நின்றேன், ஆவி
சுமந்தே அழிகின்றேன்;
ஏறே! இன்னும் உய்யினும்
உய்வேன்; இரு கூறாக்
கீறா நெஞ்சம் பெற்றனன்
அன்றோ, கெடுவேனே?
208

8781. ‘பயிலும் காலம் பத்தொடு
நாலும் படர்கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன
நல்கி, அயிலாதாய்!
வெயிலென்று உன்னாய், நின்று
தளர்ந்தே! மெலிவு எய்தி,
துயில்கின்றாயோ, இன்று? இவ்
உறக்கம் துறவாயோ?
209

8782. ‘அயிரா நெஞ்சும் ஆவியும்
ஒன்றே எனும் அச்சொல்
பயிரா எல்லைப் பாதகனேற்கும்
பரிவு உண்டோ?
செயிரோ இல்லா உன்னை
இழந்தும், திரிகின்றேன்;
உயிரோ, நானோ, ஆர் இனி
உன்னோடு உறவு? ஐயா!
210

8783. வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து,
“ஓர் விடம் அம்மா
வாழ்விக்கும் ‘‘ என்று எண்ணினென்,
முன்னே வருவித்தேன்;
சூழ்வித்து, என்னைச்
சுற்றினரோடும் சுடுவித்தேன்;
தாழ்வித்தேனோ, இத்தனை
கேடும் தருவித்தேன்?
211

8784. ‘மண்மேல் வைத்த காதலின்,
மாதா முதலோர்க்குப்
புண்மேல் வைத்த தீ நிகர்
துன்பம் புகுவித்தேன்;
பெண்மேல் வைத்த காதலின்,
இப் பேறுகள் பெற்றேன்;
எண்மேல் வைத்தேன்; என் புகழ்;
யான்தான் எளியேனோ?
212

8785. ‘மாண்டாய் நீயோ; யான்
ஒருபோதும் உயிர் வாழேன்;
ஆண்டான் அல்லன் நானிலம்,
அந்தோ பரதன்தான்
பூண்டார் எல்லாம் பொன்றுவர்,
துன்பம் பொறை ஆற்றார்;
வேண்டாவோ, நான் நல் அறம்
அஞ்சி மெலிவுற்றால்?
213

8786. ‘அறம், தாய், தந்தை, சுற்றமும்,
மற்றும், எனை அல்லால்,
துறந்தாய்; என்றும் என்னை
மறாதாய்! துணை வந்து
பிறந்தாய்! என்னைப் பின்பு
தொடர்ந்தாய்! பிரிவு ஆற்றாய்
இறந்தாய்; உன்னைக் கண்டும்
இருந்தேன், எளியேனோ?
214

8787. ‘சான்றோர் மாதைத் தக்க
அரக்கன் சிறை வைக்க,
ஆன்றோர் சொல்லும் நல்லறம்,
அன்னான் வயமானால்,
மூன்றாய் நின்ற பேருலகு,
ஒன்றாய் முடியாவேல்,
தோன்றாவோ, என் வில் வலி,
வீரத் தொழில் அம்மா?
215

8788. ‘வேலைப் பள்ளக் குண்டு
அகழிக்கும் விராதற்கும்
காலின் செல்லாக் கவந்தன்
உயிர்க்கும், கரனுக்கும்,
மூலப் பொத்தல் செத்த
மரத்து ஏழ் முதலுக்கும்,
வாலிக்கும்மே ஆயினவாறு
என் வலி அம்மா!
216

8789. ‘இருந்தேன் ஆனால், இந்திர
சித்தே முதலாய
பெருந் தேராரைக் கொன்று
பிழைக்கப் பெறுவேனோ?
வருந்தேன், “நீயே வெல்லுதி “
என்னும் வலி கொண்டேன்;
பொருந்தேன், நான், இப் பொய்ப் பிறவிக்கும்
பொறை அல்லேன்!
217

8790. ‘மாதாவும், நம் சுற்றமும்,
நாடும் மறையோரும்,
‘ஏது ஆனாரோ ‘என்று
தளர்ந்தே இறுவாரை,
தாதாய்! காணச் சால
நினைந்தே தளர்கின்றேன்;
போதாய், ஐயா, பொன்முடி
என்னைப் புனைவிப்பான்!
218

8791. ‘பாசமும் முற்றச் சுற்றிய
போதும், பகையாலே
நாசமும் முற்று இப்போதும்
நடந்தேன், உடன் அல்லேன்;
நேசமும் அற்றார் செய்வன
செய்தே நிலைநின்றேன்;
தேசமும் மற்று என் கொற்ற
நலத்தைச் சிரியாதோ?
219

8792. கொடுத்தேன், அன்றே, வீடணனுக்குக்
குலம் ஆள
முடித்து ஓர் செல்வம்; யான்
முடியாதே முடிகின்றேன்;
படித்தேன் அன்றே பொய்மை?
குடிக்குப் பழிபெற்றேன்;
ஒடித்தேன் அன்றே என்புகழ்
நானே, உணர்வு அற்றேன்?
220

புலம்பிய இராமன் ‘இறந்தொழிவோம் ‘என்னும் நிலையில் அறிவு சோர்ந்து துயில் கொள்ளுதல்

8793. என்று என்று ஏங்கும், விம்மும்,
உயிர்க்கும், இடை அஃகி,
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம்
எல்லாம் சிதைவு எய்த,
‘பொன்றும் ‘என்னாத் தம்பியை
மார்பத்தொடு புல்லி,
ஒன்றும் பேசான்; தன்னை
மறந்தான், துயில் உற்றான்.
221

இராமன் துயர்நிலையைக்கண்டு துணுக்குற்ற தேவர்கள், அவனது இறைமைத் தன்மையையும் அவதாரத்தின் உண்மையையும் எடுத்துக்கூறித் தம்மைக் காத்தருளுமாறு வேண்டுதல் (8794-8801)

8794. கண்டார் விண்ணோர்; கண்கள்
புடைத்தார், கலுழ்கின்றார்;
கொண்டார் துன்பம், ‘என்முடிவு? ‘
என்னா, குலைகின்றார்?
‘அண்டா! ஐயா! எங்கள்
பொருட்டால் அயர்கின்றாய்;
உண்டோ உன்பால் துன்பு? ‘
என, அன்பால் செய்தார்.
222

8795. ‘உன்னை உள்ளபடி அறியேம்;
உலகை உள்ள திறம் உள்ளேம்;
பின்னை அறியேம்; முன் அறியேம்,
இடையும் அறியேம், பிறழாமல்;
நின்னை வணங்கி நீ வகுத்த
நெறியின் நிற்கும் அது அல்லால்,
என்னை, அடியேம் செயற்பால?
இன்ப துன்பம் இல்லோனே!
223

8796. ‘அரக்கர் குலத்தை வேர் அறுத்து,
எம் அல்லல் நீக்கி அருளாய் ‘என்று
இரக்க, எம்மேல் கருணையினால்,
இயையா உருவம் இஃது எய்தி,
புரக்கும் மன்னர் குடிப்பிறந்து
போந்தாய்! அறத்தைப் பொறை தீர்ப்பான்,
கரக்க நின்றே, நெடுமாயம்
எமக்கும் காட்டக் கடவாயோ?
224

8797. ‘ஈன்ற எம் இடுக்கண் துடைத்து
அளிப்பான் இரங்கி; அரசர் இல்பிறந்தாய்!
“மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி
என்னும் ஆசை முயல்கின்றேம்
ஏன்றும் மறந்தேம், “அவன் அல்லன்;
மனிதன் “ என்றே; இது மாயம்
போன்றது இல்லை, அருளுடையாய்!
பொய்யும் புகலப் புக்காயோ?
225

8798. ‘அண்டம் பலவும்; அனைத்து உயிரும்,
அகத்தும் புறத்தும் உள ஆக்கி,
உண்டும் உமிழ்ந்தும், அளந்து இடந்தும்,
உள்ளும் புறத்தும் உளை ஆகிக்
கொண்டு, சிலம்பிதன் வாயின்
நூலால் இயையக் கூடு இயற்றி,
பண்டும் இன்றும் அமைக்கின்ற
படியை ஒருவாய் பரமேட்டி!
226

8799. ‘துன்ப விளையாட்டு இதுவேயும்,
உன்னைத் துன்பம் தொடர்பு இன்மை,
இன்ப விளையாட்டு ஆம்; எனினும்,
அறியாதோமுக்கு இடர் உற்றால்
அன்பு விளையும், அருள் விளையும்,
அறிவு விளையும் அவை எல்லாம்,
முன்பு பின்பு நாடு இல்லாய்!
முடித்தால் அன்றி முடியாவே.
227

8800. ‘வருவாய் போல வாராதாய்!
வந்தாயென்று மனம் களிப்ப,
வெருவாது இருந்தோம்; நீ இடையே
துன்பம் விளைக்க, மெலிகின்றேம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே!
நீயே இதனைக் களையாயேல்
திருவாழ் மார்ப! நின் மாயை
எம்மால் தீர்க்கத் தீருமோ?
228

8801. ‘அம்பரீடற்கு அருளியதும், அயனார்
மகனார்க்கு அளித்ததுவும்,
எம்பிரானே! எமக்கு இன்று
பயந்தது‘ என்றே ஏமுறுவோம்;
வெம்பு துயரம் நீ உழக்க,
வெளி காணாது மெலிகின்றேம்;
தம்பி துணைவா! நீ இதனைத் தவிர்ந்து,
எம் உணர்வைத் தாராயோ?
229

அரக்கராகிய தூதர்கள், இராவணனையடைந்து ‘உன்பகை முடிந்தது ‘என அறிவித்தல்

8802. என்ப பலவும் எடுத்து இயம்பி,
இமையாதோரும் இடர் உழந்தார்;
அன்பு மிகுதியால், ஐயன்
ஆவி உள்ளே அடங்கினான்,
துன்ப மனிதர் கருமமே புரிய
முன்பு துணிந்தமையால்;
புன்கண் நிருதர் பெருந்தூதர்
போனார், அரக்கனிடம் புகுந்தார்.
230

8803. ‘என் வந்தது நீர்? ‘என்று அரக்கர்க்கு
இறைவன் இயம்ப, எறிசெருவில்
நின் மைந்தன்தன் நெடுஞ்சரத்தால்
துணைவர் எல்லாம் நிலம் சேர,
பின்வந்தவனும் முன்மடிந்த
பிழையை நோக்கி, பெருந் துயரால்,
முன்வந்தவனும் முடிந்தான்; உன்
பகை போய் முடிந்தது ‘என மொழிந்தார்
231

 

Previous          Next